வரிய குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் இசங்கணிச் சீமை வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சௌபாக்கிய உற்பத்தி கிராமம் எனும் தொனிப்பொருளில் 20 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி எம் அன்சாரின் வழிகாட்டலில் இசங்கணிச்சீமை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ எல் எம் இர்பானின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ எம் தமீம், இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஐ கே சுலைமாலெப்பை, சௌபாக்கியா திட்டத்தின் தலைவர் எம் எம் சுலைமாலெப்பை, அல் சபா சனசமூக அமைப்பின் தலைவர் ஆர் எம் சியாம் உட்பட பலரும் கலந்துகொண்டு அரசாங்கத்தின் வாழ்வாதாரத்திட்டத்தை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment