இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவா்களுள் 4 பேரை நம் சமூகம் ஒரு போதும் மறந்துவிட முடியாது அரசியல் விவேகத்தினாலும் கல்வியினாலும் சிந்தித்து அவா்கள் எமக்கு ஆற்றிய சேவையை நம் சமூகம் இன்றும் அனுபவிக்கின்றோம். அவா்கள் எமது சமூகத்தின் கல்வி வளா்ச்சிக்காக பல சிந்தனைகளை வித்திட்டவா்கள். அறிஞா் சித்திலெப்பை, கலாநிதி டீ.பி. ஜாயா, கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் ஆகிய தலைவா்கள். இத் தலைவா்கள் பற்றி எமது இளைய சமூகத்தினா்கள் அவா்கள் பற்றிய புத்தகங்களை தேடி வாசித்து அறிந்து கொள்ளல் வேண்டும். என நீதியமைச்சா் அலி சப்றி உரையாற்றினாா்.
அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் 71ஆவது மாநாடு இலங்கை மன்றக் கல்லுாாியில் சனிக்கிழமை (20) அதன் தேசியத் தலைவா் சகீட் எம். றிஸ்மி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சா் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்றி கலந்து கொண்டாா். அவர் அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவிததார்.
அமைச்சர் அலி சப்றி அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் -
உலகில் பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறியுள்ளாா்கள். அமேரிக்காவில் கூட பெண்கள் கல்வியில் 58 வீதத்திலும் இலங்கையில் 62 வீதத்திலும் எமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் 70 வீதமான பெண்களும் பட்டதாரிகாளக உள்ளாா்கள். அவா்களிடம் சிறந்த ஒழுக்கம் உள்ளது. . இதற்கு உதாரணமாக எமது நாட்டில் 51 வீதமான பெண்கள் உள்ளனா் அதில் சிறைச்சாலைகளில் குற்றமிலைத்த 3 வீதமான பெண்களே உள்ளனர் ஏனைய வீதத்தில் ஆண்களே உள்ளனர். ஆகவே தான் பெண்கள் சிறந்த ஓழுக்கமானவா்கள். பண்பு கொண்டவா்கள் . அவா்களுக்கு சிறந்த தலைமைத்துவததுவம் வழங்கப்படல் வேண்டும். இதற்காக பெண்களும் முன் வரல் வேண்டும்.
மலேசியாவில் பிரதம நீதியரசர் பெண் உள்ளாா், ஆசியாவில் 2040 ஆம் ஆண்டளவில் 5வது அபிவிருத்தியடைந்த நாடாக பங்களதேஸ் முன்னேறி வருகின்றது அங்கும் பெண்தலைமைத்துவத்தின் கீழ் அந் நாடு கட்டியெழுப்பப்படுகின்றது. அவா்கள் 50 பில்லியன் டொலா்களை சேமித்து வைக்ககூடியதாக உள்ளது. எமது நாட்டில் முன்னைய காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கக் கூடாது ? ஆங்கில பாடசாலையில் ஆண்கள் கல்வி கற்றால் வேறு மதத்தினை ஏற்றுவிடுவாா்கள் என எம்மவா்கள் சிலா் பத்வா கொடுத்த வரலாறும் உண்டு இவற்றினை உடைத்து எறிந்து தான் அறிஞா் சித்திலெப்பை கொழும்பு சாகிராக் கல்லுாாியை ஆரம்பித்தார்கள். கடந்த 30 வருட கால யுத்தத்தினை முடிபுக் கொண்டுவந்த தலைமைத்துவத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறந்து விளங்கினாா் , சிறந்த இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா, சிறந்த புலானாய்வுத் தளபதியாக கேணல் முத்தலிப், சிறந்த உயா் இராணுவ வீரராக கேணல் பாரிஸ் போன்றவா்கள் எமது நாட்டின் வெற்றிக்காக பங்கு கொண்டுள்ளாா்கள். எனது நீதி அமைச்சின் சில புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அதன் கீழ் புதிதாக 46 இளம் நீதிபதிகள் அன்மையில் நியமிக்கப்பட்டுள்ளாா்கள், புதிதாக 100 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட உள்ளது. 84 சட்ட வழக்குகள் சட்டங்கள் என புதிய உப பிரிவு முறைகள் உருவாக்கப்்பட உள்ளது.
இந்த அரசின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரநிதித்துவம் கட்டாயம் இருத்தல் வேண்டும். அதை கடந்த 2 வருட காலத்தில் என்னால் உணரப்பட்டன. அங்கு அமைச்சரவையில் முஸ்லிம் பிரநிதித்துவம் இல்லாமல் போனால் அங்கு எமது சமூகத்தில் பாரிய இழப்புகள் ஏற்படும். எனவும் அமைச்சா் அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.
இவ் வைபவத்தில் . கௌரவ அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளா் பாத்திமா றினோசியா கலந்து கொண்டாா். இந் நிகழ்வின்போது ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் காதா் எம். அலி, கொவிட் 19 மரணமாகும் 4 இனங்களையும் கொண்டவா்களை மஜ்மா நகரில் நல்லடக்கத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி அவருக்கு விசேட விருதும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் வை.எம்.எம். ஏ பெண்கள் அமைப்பின் தலைவி பவாசா தாஹாவின் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது அத்துடன் சிறந்த சேவைகளை ஆற்றிய வருகின்ற வை.எம்.எம். ஏ கிளைகளின் தலைவா்களுக்கும பிரதம அதிதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment