57 ஆவது இலங்கை இராணுவ படையனி மெய்வல்லுனர் போட்டியில் 10 அம்ச போட்டியில் பங்குபற்றிய நிந்தவூரை சேர்ந்த எம்.ஐ.எம்.அஸான் 6892 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை சுவிகரித்துள்ளார். கடந்த 22ம் திகதி முதல் 26ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெற்ற இந்த போட்டிகளில் இராணுவபடையணியின் மின்சார பொறியியல் பிரிவு படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் கலந்து கொண்டார்.
இவ் போட்டியில் எம்.ஐ.எம்.அஸான் 7 முதலிடங்களையும் 3 இரண்டாமிடங்களையும் பெற்று மொத்தமாக முதன் முறையாக தங்கப்பதக்கத்தை சுவிகரித்துள்ளதுடன் நிந்தவூர் சார்பாக 10 அம்ச போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் முதல் வீரரும் இவர் ஆவார்.
அத்துடன் இலங்கையின் 10 அம்ச மெய்வல்லுனர் தர நிலையிலும் முதலிடத்தை பெற்றுள்ளதேடு தேசிய மெய்வல்லுனர் குழுவுக்கும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நிந்தவூர் லகான் விளையாட்டு கழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment