நேற்று ஆர்வத்தோடு வருகைதந்த சாதாரணதர உயர்தர மாணவர்கள்! மழைக்குமத்தியில் சகல பாடசாலைகளும் ஆரம்பம்



காரைதீவு சகா-
நீண்டகால கொரோனா விடுமுறையின் பின்னர் நேற்று(8)திங்கட்கிழமை க.பொ.த சாதாரண தரத்தின் முதல்வருடம் என அழைக்கப்படும் தரம் 10, சாதாரணதரத்தின் இரண்டாம் வருடம் என அழைக்கப்டும் தரம் 11 மற்றும் உயர்தர 1ஆம் 2ஆம் வருட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்தனர்.

நேற்று மழைக்கு மத்தியில் காரைதீவு விபுலாநந்தா தேசிய கல்லூரிக்கு பெருவாரியான மாணவர்கள் வருகைதந்தனர். அவர்களை அதிபர் ம.சுந்தரராஜன் உள்ளிட்ட ஆசிரியர்குழாம் சுகாதாரமுறைப்படி வரவேற்றனர்.

கொரோனாவால் இழந்த கல்வியை மீட்க அரசாங்கம் பல வகையான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி படிப்படியாக நான்குகட்டங்களாக பாடசாலைகளை திறந்துவருகிறது.

அதன்படி மூன்றாம்கட்டமாக நேற்று 8ஆம் திகதி தரம் 10, 11, 12, 13ஆகிய வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டிருந்தது.

நான்காம் கட்டமாக ,தரம் 6முதல் தரம் 9வரையான மாணவர்களை எப்போது அழைப்பது என்பதை இன்னும் கல்வியமைச்சு வெளியிடவில்லை. எனினும் அதுவும் அடுத்தவாரம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

ஏலவே, ஆரம்பவகுப்பு மாணவர்களுக்கான சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டு எவ்வித விக்கினமுமின்றி வெற்றிகரமாக பூரண அதிபர், ஆசிரியர்,மாணவர் வரவுகளுடன் நடைபெற்றுவருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :