ஜனாதிபதின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடத்திற்கமைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கிராமிய பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்திற்கமைய சவளக்கடை பொது விளையாட்டு மைதானம் 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.கே.ஏ.சமட், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.அப்துல் றகீம், பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.யோகநாயகம், ஏ.பீ.சுபைதீன், எம்.ஜஹான், எஸ்.கிருபைமலர், ஆர்.யோகஸ்வரி, விளையாட்டு வீரர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment