எம்.ஐ.எம். முஹியத்தீன் விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டிய கட்டாயம் இளம் தலைமுறைக்கு இப்போது எழுந்துள்ளது : தேசிய முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்


நூருல் ஹுதா உமர்-

ன்னூலாசிரியர், புள்ளிவிபரவியலாளர், ஆவணக் காப்பாளர் என பலதளங்களிலும் இயங்கிக்கொண்டு அதிகாரப்பகிர்வினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமெனில் கிழக்கிலும் வடக்கிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற அதிகார அலகொன்றை வழங்குவதற்கான பரிசீலனை செய்யப்படவேண்டும்.

 இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் சுயநிர்னய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென்று முதன்முதலில் முன்மொழிந்த பெருந்தகை, இலங்கை வரலாற்றின் ஆவணப் பெட்டகம் எம்.ஐ.எம். முஹியத்தீன் காலமான செய்தி வருத்தமளிக்கிறது என தேசிய முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். வலீத் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அனுதாப செய்தியில் மேலும், முகவரியற்ற சமூகத்தின் முகவரி தேடியலைந்து களைத்துப்போன தருணங்களில் தனது தியாக சிந்தனையினால் உற்சாகமளித்து உறுதுணையாக நின்று வரலாறு பேசிய பத்திரிகைக்காரனாக, ஆய்வுகளின் மீது உண்மைகளை திணித்த ஆராய்ச்சியாளராக, சொந்தப்பணத்தை செலவழித்து சமூகத்தின் குரலாக ஓங்கியொலித்த குரல் ஓய்வாகிப்போனது கவலையளித்தாலும் அந்தப்பணிகளை இளம் தலைமுறை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது.

 விவேகமாக பயணித்து வினைத்திறனுடன் செயலாற்றிய எம்.ஐ.எம். முஹியத்தீனின் இழப்பு ஈடுசெய்ய முடியா பேரிழப்பாகும். அவரின் மறைவால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்ந அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று அந்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :