ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரிடம் உறுப்பினர் அஸீஸுல் றஹீமின் கேள்வி



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு செல்லும் வீதி சேதமடைந்துள்ளது என்று தவிசாளரிடம் தெரிவிக்கும் போது சீர் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தியாவட்டுவான் வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் றஹீம் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு செல்லும் வீதி சேதமடைந்ததை பார்வையிட்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் துரித நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை அடுத்தே பிரதேச சபை உறுப்பினர் மேற்சொன்ன கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கடந்த வியாழக்கிழமை (11.11.2021) பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தின் முன்னால் உள்ள பாலத்துடன் இணைந்த வீதி இடிந்து விழுந்துள்ளது இதனை பார்வையிட்ட நீங்கள் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளீர்கள் வாக்குறுதியளித்தது போன்று செய்து தந்தால் மிக்க நன்றி.
குறித்த பாலத்துடன் இணைந்த வீதி இடிந்து விழப்போகிறது இதனை புனரமைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சு 2021.04.06ம் திகதி கடிதம் மூலம் தங்களுக்கு அறிவித்திருந்தது ஆனால் 11.11.2021 இடிந்து விழும் வரை நீங்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது கவலையான விடயம்.

வறிய மக்கள் அதிகம் வாழும் எனது வட்டாரத்தில் மாணவச் செல்வங்கள் இவ் வீதியினால் பயணிக்கும் போது எவ்வித ஆபத்தும் நிகழ வில்லை இறைவன் பாதுகாத்தான்.

நான் இப்பகுதிக்கான பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் சபை தவிசாளராகிய உங்களிடம் இவ் வீதியினை புனரமைத்து தருமாறு ; பல தடவை அறிவித்தும் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் வாக்குறுதியளித்திருந்தீர்கள் ஆனால் எதுவித நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை என்பது கவலையான விடயம்.

சபையினால் உடைந்த வீதியை புனரமைக்க முடியா விட்டால் முடியாது என்று தெரிவித்திருக்க வேண்டும் அல்லது கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தவிசாளர் என்றவகையில் உங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் இடிந்து விழுந்ததும் படம் காட்ட வருகின்றீர்களே இது உங்களுக்கே நியாயமாகப்படுகின்றதா என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :