சர்ச்சைக்குரிய தேரரின் நியமனம் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது நாட்டின் ஜனாதிபதியும் மௌனம் காக்கின்றார்



முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்
சில நாட்களுக்கு முன்னர் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பில் ஜனாதிபதி செயலணியை அமைத்து “பிரசித்தமான” தேரரை அதற்குத் தலைவராக நியமித்திருக்கின்றார்கள். “இது தேவையில்லாத வில்லங்கத்தை தோற்றுவிக்கும் விடயமல்லவா?” என இன்றைய ஆட்சியாளர்களின் பங்காளிக் கட்சியினரும் கூட கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான விடயங்களில் ஜனாதிபதியும் மௌனம் காக்கின்றார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சோனகத் தெரு முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (2) இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வருகை தந்தபோது நிர்வாகத்தினராலும் ஊர் ஜமாஅத்தினராலும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவரது நீண்ட உரையின் போது மேலும் தெரிவித்ததாவது,
நாம் இப்போது பல சிக்கல்களுக்கும்இ பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வந்தாலும்இ 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வெறுமனே இரண்டு மணித்தியாலங்கள் காலக்கெடு விதித்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடைய அவலம் என்பது சாமான்யமானதல்ல. இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்றின் திருப்புமுனையே ஹிஜ்ரத் தான். “வெளியேறிச் செல்லுதல்” என்ற சம்பவத்தோடு தான் இஸ்லாத்தின் உண்மையான போராட்டம் அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாமிய வருடக் கணிப்பையும் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டே கணித்து வருகின்றோம். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த சம்பவத்தைத் தாண்டி 31 வருடங்களைக் கடந்து வந்துள்ளோம்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு ஹோட்டலில் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் சீர்த்திருத்தம் சம்பந்தமான கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் அதில் பங்குகொள்ள சென்றிருந்த போதுஇ முன்னாள் வடகிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த தமிழ் நண்பரொருவர் எனது அருகில் வந்து “இன்றைய நாள் (அக்டோபர் 30ஆம் திகதி) உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா?” எனக் கேட்டுவிட்டுஇ “வடக்கிலிருந்து பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாள் இன்று” எனக் கூறினார். அவ்வளவு தூரம் அவர்களின் உள்ளங்களில் கூட இந்தச் சம்பவமானது மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.
எனக்கு இன்று போல நினைவு இருக்கின்றது எங்களுடைய 12ஆவது மாநாடு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடத்தியபோதுஇ சகல இன கட்சித் தலைவர்களையும் அதற்காக அழைத்திருந்தோம். அதற்கு வருகை தந்திருந்த நல்லூர் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற மு.சிவசிதம்பரம் ஐயா உரை நிகழ்த்தும்போது “வடக்கிலிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக விரட்டியடித்த விடயத்தை எண்ணி ஒரு தமிழனாக நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்.
மேலும்இ பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சூழ்ந்திருக்கின்ற இந்த தருணத்தில்; வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரையில் நானும் வடக்கிற்குச் செல்லப் போவதில்லை என்பதை ஒரு சூளுரையாகச் சொல்கின்றேன”; என்றார். அதனை அவர் அவ்வளவு உணர்வுபூர்வமாக கூறியிருந்தார். மரணிக்கும் தருவாயில் தான் அவர் மீண்டும் வடக்கை வந்தடைந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி சந்தித்தேன். நோர்வே ஏற்பாட்டாளர்கள் மூலமாக எதிர்பாராத விதத்தில் எங்களுக்கு அவரை சந்திப்பதற்காக அறிவிப்பு வந்திருந்தது. விசேட வானூர்தியில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு எனது தலைமையில் கிளிநொச்சியில் அவரை சந்திப்பதற்காகச் சென்றோம். புதுக்குடியிருப்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஒருங்கு செய்யப்பட்டிருந்தன. ஏறத்தாழ 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நாங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு நேருக்கு நேர் அமர்ந்து தமிழ்இ முஸ்லிம் விவகாரம் தொடர்பில் கதைத்திருந்தோம். அப்போது எங்களுடன் அன்டன் பாலசிங்கமும் கலந்துகொண்டிருந்தார். அவர் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” எனக் கூறியிருந்தார். அதை நாங்கள் பேசுமளவுக்கு அவர்கள் வைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் உணர்வுபூர்வமாக அதனைக் கூறினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்தின் தூதுக்குழுவில் 6 தடவைகள் வெளிநாடுகளில் இடம்பெற்ற சந்திப்புக்களில் நானும் கலந்துக் கொண்டவன் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் நடந்த விடயத்தை பற்றி பேசுவதற்கே அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதனை எவ்வாறாவது மீள சரி செய்துவிட வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டுமென்பதில் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களிடம் பல விடயங்களை பேசினோம். நான் மிக முக்கியமாக ஒரு விடயத்தை விடுதலைப் புலிகளின் தலைவரோடு பேசினேன்.

அந்த நேரத்தில் எங்களுக்கு இருந்த பிரச்சினைகளுள் ஒன்று தான் முழு தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட பிறகுஇ எல்லா இடங்களிலும் சாரிசாரியாக மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுகளை மேற்கொண்டு புலிகளை மக்கள் வரவேற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருபுறம் பீதியும்இ மறுபுறம் அச்சமும்இ விடுதலையும் என எல்லாம் கலந்துவிட்ட மாதிரியான ஒரு நிலைவரம் நிலவிய காலப்பகுதியில் பல இடங்களில் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்பட்டிருந்தது.

புலிகளின் ஊடுருவலை தொடர்ந்து முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் எடுக்கும் நிலைமை காணப்பட்டது. அரசாங்கத்தின் மூலம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு சர்வதேசத்திடமும் அதற்கான அனுசரணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் கூடஇ இவ்வாறு வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமை கடுமையாகத் தளைத்தொங்கி இருந்தது.

மேற்படி சம்பவத்தையும் ஓர் அம்சமாக எடுத்து தலைவர் பிரபாகரனிடம் பேசி இருந்தேன். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் இப்போது தான் கிழக்கில் அவர்கள் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களிடத்தில் வரி அறவிடுவது நியாயமற்றது என்பதை முறையிட்டோம். அதற்கு அவர்இ அருகிலிருந்த அன்டன் பாலசிங்கத்தோடு கதைத்துவிட்டுச் சொன்னார்இ “தமிழ் வர்த்தகர்களிடமும் இவ்வாறு வரி வசூலிக்கவே செய்கின்றோம். ஆகவே தான் முஸ்லிம்களிடத்திலும் அதனை கேட்கின்றோம். இத்தனை போராளிகள் எங்களிடத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய செலவுகள்இ பிரச்சினைகள் எல்லாவற்றையும் நாங்கள் தீர்க்க வேண்டும். அதற்காகவே இத்தகைய வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களிடத்தில் வரி விதிக்காமல் போனால் தமிழர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவர்களிடத்திலும் வரி வசூலிக்கின்றோம்” என்றார்.

அதற்கு நான் அவரிடத்தில் சொன்னேன்இ “முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில்இ தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிம்களின் சார்பில் எதுவும் செய்துவிடவில்லை. போதாக் குறைக்கு இருந்த முஸ்லிம்களையும் விரட்டிவிட்டீர்கள் என்பதே பாதிக்கப்பட்ட எங்களுடைய மக்களின் மனப்பதிவாகவுள்ளது. மீண்டும் அவர்கள் இக்கட்டுக்களுக்கு மத்தியில் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர்களிடத்தில் கோரப்படும் வரிப் பணத்தை ஒரு கப்பம் மாதிரியாகவே பார்க்கின்றார்கள்” என்றேன்.

அதற்கு அவர் உடனே “ நீங்கள் கூறுவது சரி. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாளையிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்களிடத்தில் நாங்கள் வரி அறவிட மாட்டோம். அதனை நீங்கள் என்னுடைய வாக்குறுதியாக எடுக்கலாம்” என உறுதியளித்தார்.
கிழக்கிலிருந்து வந்த போராளிகளே வடக்கிலிருந்த முஸ்லிம்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் உந்துதலாக செயற்பட்டார்கள் என்றெல்லாம் கதைக்கப்பட்டுள்ளது. ஆனால்இ அதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது .

அண்மையில் பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இன்று முஸ்லிம்களுக்கு மேல் நடத்தப்பட்டுவரும் மிக மோசமான பாய்ச்சல் குறித்து நான் உரையாற்றுகையில்இ சஹ்ரானின் பின்னணியிலுள்ள மறைகரம் என்ன? என்ற கேள்வியை எழுப்பினேன். இதுவரையில் எத்தனையோ விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன.
இந்நாட்டின் கத்தோலிக்க மதத் தலைவர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இது தொடர்பில் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளார். அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட சூழ்ச்சி என வெளிப்படையாகவே கத்தோலிக்க தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு பேசி வருகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜயவீர மற்றும் அவருடைய போராளிகளை வீரர்களாக கருதி இன்றும்"இல் மஹவிரு சமருவ" என குறிப்பிட்ட மாத த்தில் அவர்கள் நினைவை அனுசரிக்கின்றார்கள். அவர்கள் சார்பில் செய்யப்பட்ட ஒரு போராட்டமாகவே அது நோக்கப்படுகின்றது. இயக்கத்திற்காக உயிர் நீத்தவர்கள் நினைவுக் கூரப்படுகின்றார்கள். அதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாகக் கூறிஇ அந்த நாளை அவர்கள் நினைவுபடுத்துகின்றார்கள்.
அவ்வாறேஇ புலிகளும் “மாவீரர் தினம்” என்ற பெயரில் நினைவு நாளொன்றை கொண்டாடுகின்றார்கள். என்னதான் இராணுவத்தினரால் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டாலும்இ அவர்கள் முடிந்தவரை ஒரு தீபத்தைக் கொழுத்தியாவது அதனைக் கொண்டாடுகின்றார்கள். திலீபன் மற்றும் பிரபாகரனும் கொண்டாடப்படுகின்றார்கள். இவ்வாறு எல்லா இனத்தவரும் குறிப்பிட்ட தினத்தில் உயிர்நீத்த போராளிகளை நினைவுப்படுத்தவே செய்கின்றனர்.

ஆனால்இ சஹ்ரானையோ அவருடைய கும்பலைச் சேர்ந்த எவரையோ இந்நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்கள் கொண்டாடுகின்றார்களா? என்று பாருங்கள். ஏனெனில்இ அவர்கள் யாரும் எங்களுக்காக எதனையும் செய்துவிட்டு மாண்டுவிடவில்லை. மாறாகஇ வலிய வந்து வம்புக்குள் எங்களை மாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒரு கூலிப்படையாகவே முஸ்லிம்கள் அவர்களை பார்க்கின்றார்களே ஒழியஇ அவர்கள் எங்கள் சமூகத்திற்;காக எதனையும் செய்துவிடவில்லை. இது தான் உண்மை. இதனை இந்நாட்டிலுள்ள சிங்கள மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பேசியிருந்தேன்.

எனது தலைமையில் இங்கு இன்று (02) சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் ஒரு நிருபர் என்னிடத்தில் கேள்வியொன்று கேட்டார். அதாவதுஇ “வடகிழக்கில் இன்று உருவாகியுள்ள மோசமான நிலைவரத்திற்கு இனியாவது தமிழர்களும்இ முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்ட நிலையில் அரசியல் செய்ய முன்வருவீர்களா?” எனக் கேட்டார். அதற்கு நான் கூறினேன். “அரசியலில் மட்டுமல்லஇ எல்லா விதமான சந்தர்ப்பங்களிலும் நாம் ஒற்றுமையாகத் தான் செயற்பட வேண்டும்” என்றேன்.

எங்களது இன்றைய ஆட்சியாளர்கள் ஏதோவொரு பீதியிலேயே நாட்டை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற போதிலும்இ “அவர்களை ஏன் இன்னும் கட்சிக்குள் வைத்திருக்கின்றீர்கள்?” என்று என்னிடத்தில் ஒருவர் இங்கு கேட்டார். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் முஸ்லிம் காங்கிரஸிற்கு நடக்கின்ற விடயம் தான் இது. பெரும்பான்மையில் இரண்டு அல்லது மூன்று வாக்குகள் குறைவென்றால் முதலில் கைவைக்கின்ற இடம் சிறிய கட்சிகளில் தான். அதற்கு அதிகளவில் சோரம் போவதும் எங்களுடையவர்களே. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்கள் அனைவரும் மிகவும் உயரிய உள்ளம் கொண்டவர்களைப் போலவே கதைப்பார்கள்.

என்னிடத்தில் வெறும் சம்பிரதாயத்திற்காக ஒரு விருப்பத்தை கேட்டுக்கொண்டு அதற்கு நான் மறுக்கும் பட்சத்தில் அடுத்ததாக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தவே முற்படுகின்றார்கள். இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் நாங்கள் சற்று தூர நோக்குடனேயே சிந்திக்க வேண்டும்.

வாக்களிப்பின் போது கை உயர்த்திய உறுப்பினர்களை வெளியேற்றுங்கள் என்கிறார்கள். பிரச்சினை என வெளியேற்றினால் அவர்கள் ஒன்று சேர்ந்து இன்னொரு கட்சியாக உருவாகலாம். இது மாதிரி தான் கட்சியை விட்டு ரிஷாத் பதியுதீனும் ஆட்சியில் இருந்து அமைச்சுப் பதவியொன்றை பெறுவதற்காக வெளியேறினார். இந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய எவருமே அமைச்சுப் பதவிகளுடனேயே தான் வெளியேறினார்கள். எவரும் வெறுமனே செல்லவில்லை. இவ்வாறு தான் முஸ்லிம்களுடைய அரசியல் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நான் இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே நானும் மிக நிதானமாக இருக்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மக்கள் மத்தியில் உண்மையை பேசத் தொடங்கினால் அவர்களுடைய பேச்சுக்கள் எடுபடாமல் போய்விடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இவர்கள் கிழக்கிலுள்ள எல்லைப் பிரச்சினைகளை தூக்கிப் பிடுத்துக்கொண்டு இதற்காக அரசாங்கத்தோடு சேர்ந்து போகாவிட்டால்இ தமிழர்கள் வசம் சென்றுவிடும் என்று பாசாங்குகளை பரப்புகின்றார்கள்.

ஆனால்இ இவையொன்றும் தேர்தல் காலங்களில் எடுபடாது. தலைவர் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்னிடத்தில் எதுவித ஒழிவு மறைவும் கிடையாது. மனந்திறந்து பேசுபவன். இந்த ஆட்சியாளர்களிடம் எந்த நன்மையையும் எதிர்பார்ப்பவனும் அல்ல. என்னையும் மாட்டிவிடவே பார்த்துக்கொண்டு இருக்கி;ன்றார்கள். சந்தர்ப்பம் கிட்டினால் என்னையும் “உள்ளே” அனுப்பிவைப்பார்கள். அதற்கு இடமளிக்காது மிக நேர்மையாகவே நடக்கின்றேன்.

வார்த்தைகளை இடமறிந்து அளந்து பேச வேண்டும். ஆயினும்இ சில இடங்களில் மிகவும் காரசாரமாகவே பேசி வருகின்றேன். அது தான் எனது வழமையும் கூட. சர்வதேச சமூகங்களிடத்திலும் கட்சி என்ற விதத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு மேலோங்கி நிற்கவே செய்கின்றது. இதற்காகவே இந்த இயக்கம் பிளவுபடாது வாழ வேண்டும். எமது சமூகம் ஒற்றுமைப்பட்ட சமூகமாக இருப்பதற்கு பலமான தாய் இயக்கமொன்று இருக்க வேண்டும்.

அது போல் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளவில்லை. நான் கூறினேன் அந்தக் கட்சியையும் இணைத்துக்கொண்டு தான் எமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதனை தவிர்த்து தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை. நான் எல்லாவற்றையும் நடுநிலையாகவே எடுத்து நோக்குபவன். அவர்களிடத்தில் இருக்கின்ற சிறிய சிறிய மனக்கசப்புக்களைத் தீர்த்துகொண்டு அவர்களையும் இணைத்தவாறே இந்த பயணத்தை முன்னெடுக்க எண்ணியுள்ளேன்.

என்றுமில்லாதவாறு முஸ்லிம்களுக்கு மத்தியில் முஸ்லிம்களும்இ தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்கவேண்டுமென்ற வேட்கை எழுந்துள்ளது. இது சாத்தியப்பட்டால் சந்தோஷப்படுவோம் என மக்களே பேசத் தொடங்கியுள்ளார்கள். தமிழ் தலைமைகளும் அதனை விரும்புவது போலவே பேசுகின்றார்கள். அரசியலுக்காகத் தான் எல்லா வகையான பிளவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு எங்கெங்கெல்லாம் போராட வேண்டுமே அதனை மேற்கொள்ளத்தான் வேண்டும். நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனை சீர்குழைத்துவிட முடியாது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலணியை அமைத்து “பிரசித்தமான” தேரரை அதற்கு தலைவராக நியமித்திருக்கின்றார்கள். “இது தேவையில்லாத வில்லங்கத்தை தோற்றுவிக்கும் விடயமல்லவா?” என ஆட்சியாளர்களின் பங்காளிக் கட்சியினரே கேள்வி எழுப்புகின்றார்கள். இவ்வாறான விடயங்களில் ஜனாதிபதியும் மௌனம் காக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம்களுடைய ஷரீஆ சட்டம் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்கின்றார்கள். முஸ்லிம் விவாகஇ விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே இப்போது “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தொனியில் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றம் செய்தவருக்கு ஷரீஆ சட்டப் பிரகாரம் தண்டனை வழங்கப்படுவதில்லை. நாங்கள் இந்நாட்டு குற்றவியல் சட்டங்களையே பேணிக் கடைப்பிடித்து வருகின்றோம்.

வெறுமனே சொத்துரிமை சட்டம்இ விவாகஇ விவாகரத்து சட்டம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு எங்களுடைய மூதாதைகளின் காலந்தொட்டு அனுபவித்துவரும் உரிமையை வேறுவிதமாக திரித்துக் காட்டவே முற்படுகின்றார்கள். இது அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களுக்கு தெரிவதில்லை. அவர்களிடத்தில் இவர்கள் சென்று பூச்சாண்டி காட்டவே செய்கின்றார்கள். நாங்கள் ஒரு ஆணாதிக்க சமூகம் என்றும்இ பெண்களை மோசமாக நடத்துகின்றோம் என்றும்இ பெண்களை வேண்டுமென்றே துன்புறுத்துகின்றோம் என்றவாறும் கட்டுக் கதைகளை பரப்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்களை தவறாக காட்டுவதற்காகவே இந்த அரசாங்கம் இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகின்றது.

டாக்டர் ஷாபியின் விவகாரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் கைது இவையெல்லாம் வெறுமனே சிங்கள மக்கள் மத்தியில் திருப்தியை பெற்றுக்கொள்ள செய்த காரியங்களே. இவர்களைக் கையாள்வதில் சில தந்திரோபாயங்களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

தற்பொழுது மின்சக்திஇ எரிபொருள்இ துறைமுக ஊழியர்கள் அனைவரும் இணைந்து வேலை நிறுத்தம் செய்வதற்கான முஸ்தீபு நடந்துக்கொண்டிருக்கின்றது. நாடு முழுவதிலும் ஆசிரியர் வேலை நிறுத்தம் போய்க்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களை மழுங்கடிப்பதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.

இந்த நெருக்கடிகளை தந்திரோபாய முறையில் கையாள்வது இலகுவான விடயமல்ல. ஆட்சியாளர்களுக்கு சவாலாக அமைய வேண்டுமானால்இ தனியாக நின்று போராடுவதை பார்க்கிலும்இ கூட்டாக நின்று போராடுகின்ற களநிலவரத்திற்கே நாங்கள் எல்லோரும் வந்திருக்கின்றோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் அண்மையில் ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்கள். அதாவதுஇ 18 வயது நிரம்பிய உடனேயே வாக்களிப்பதற்கான வாய்;ப்பை வழங்குவதாகும். ஜூன் மாதம் 1ஆம் திகதி தான் வாக்காளர்கள் இடாப்புக்களை மீளாய்வு செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.

நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அதுவரை பார்த்திருக்க தேவையில்லை என்றார்கள். வருடத்திற்கு 4 முறை அவ்வாறு தேர்தல் இடாப்புக்களில் உள்வாங்கப்பட போகின்றது. அதற்கு நான் சொன்னேன் அவ்வாறானால்இ 18 வயது நிரம்பிய உடனேயே வாக்களிக்க இடமளிப்பதானால் அதேபோன்று வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற இடங்களில் இருந்துகொண்டு இடம்பெயர்க்கப்பட்ட இடங்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டு வந்தது. தற்காலிகமாக சில வருடங்களாக நாங்கள் நீடிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம். இப்பொழுது அதனை நிறுத்தி நிரந்தர வதிவிடமிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்கின்றனர்.

வாழ்வாதாரம் கிடைத்தவர்களுக்கு அதனை இலகுவில் மீட்டிக்கொள்ள முடியாது. முன்னர் இருந்த நடைமுறைப்படி தேர்தலுக்கு நியமனம் பத்திரம் கோரப்பட்ட பிறகு தேர்தல் ஆணையாளர் ஓர் அறிவித்தலை விடுப்பார். அதன்படி இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு தனிப்பட்ட இடாப்பொன்று தயார் செய்யப்பட்டு வந்தது.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கள் பூர்வீக இடங்களில் உள்ள வாக்குரிமையை பறிகொடுக்கும் நிலைமை உள்ளது. ஆனால்இ இது தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூட இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு தற்போதைய வசிப்பிடங்களிலிருந்து வாக்களிக்கும் ஏற்பாடுகள் பற்றி எடுத்துக் கூறிய போது. அதுவொரு நல்ல ஏற்பாடு தான் என கொள்கையளவில் ஏற்றுக்கொண்டார்.

வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் நிறையப் பேர் வேறு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். யாழ்ப்பாணம் போன்ற சில பிரதேசங்களில் அவ்வாறு சென்று வாழ்வதற்கு வசதியற்ற நிலையில் குறைந்த எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது நிலைமை கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட்டு இவ்வாறான உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படுவதில் நாம் கூடுதல் கரிசனைக்காட்ட வேண்டியுள்ளது என்றார்.

(நன்றி: விடிவெள்ளி 2021.11.04)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :