அண்மையில் இடம்பெற்ற தேசிய புகைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் தேசிய அளவில் 3ம் இடத்தினை டீ. அப்துல் ஹமீட் பெற்றுக்கொண்டார். கிழக்கு மாகாணத்திலிருந்து இதுவரை யாரும் இந்த விருதினை பெற்றுக் கொள்ளவில்லை என்ற ஏக்கத்தினை ஹமீட் நிவர்த்தி செய்திருந்தார் என்பதனால் அவரை வாழ்த்தி பாராட்டும் நிகழ்வு ஒன்று சன்ரைஸ் கழகத்தின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது
ஓய்வுபெற்ற நில அளவையாளர் முஹைதீன் பாபாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய எஸ்.எம் சபீஸ், ஒரு குழந்தைக்கு கல்வியை கொடுப்பது ஒரு பள்ளிவாசலை கட்டுவதைவிட மேலானது. பசிக்கும்போது நாம் சாப்பிடுகின்றோம். ஆனால் மனதுக்கு எது உற்சாகம் தரும் என்றால் அது பாராட்டாகத்தான் இருக்க முடியும். என்னால் இன்னமும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைக்யை அதிகரிக்கவே இந்தப் பாராட்டு நிகழ்வு என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்,
கவிஞர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊர்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment