இன்று நாடு வக்குரோத்து நிலைக்கு போவதைப் பார்க்கிறோம்.-ரோஹினி கவிரத்ன



எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கலந்து கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.
ன்று நாடு பல அழிவுகளை எதிர்நோக்கியுள்ளது.நாட்டிற்கு சுபீட்சத்தை ஏற்படுத்த வந்த அரசாங்கம் ருவன்வெலி ஸ்தூபிக்கு முன்பாக ஆரவாரமாக ஆரம்பித்து இன்றளவில் பல சாபங்களை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மக்கள் மரண பயத்துக்கு மத்தியில் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர்.மண்சரிவு வெள்ளம் என்று மூன்று வகையான சாபங்களை கொண்டு வந்த அரசாங்கமாக இது திகழ்கிறது.

இன்று நாடு வக்குரோத்து நிலைக்கு போவதைப் பார்க்கிறோம்.சர்வதேச நிதி நிறுவனங்கள் தரப்படுத்தலிலுருந்து எமது நாட்டை இரண்டு நிலைக்கு கீழ் மட்டத்தை நோக்கி தாழ்த்திவிட்டுள்ளன.சர்வதேச நிறுவனங்கள் போக அமைச்சர் பந்துல குணவர்தனவும் வக்குரோத்து நிலைக்கு ஆளாகிவிட்டதாக கூறினார்.அரசாங்கம் மீள முடியாத நிலையை அடைந்து நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.மக்களுக்கு உணவு உண்ணும் பரந்த வாய்ப்புகளும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.மக்களுக்கு என்ன கொடுக்க உத்தேசித்துள்ளார்கள் என்று வெள்ளிக் கிழமை வரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த அரசிடம் இரண்டு பொருளாதார மேலாண்மை முறைகள் உள்ளன.அதில் ஒன்று விற்பனை மற்றொன்று கடன் வாங்குவது.விற்று, கடன் வாங்குவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு மாற்று வழியில்லை என்று தான் செயற்பாடுகளை நோக்கும் போது புரிகிறது.கடன் வாங்க மாட்டோம் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார், ஆனால் உன்மையான கதையை அவர் சொல்லாமல் சொல்கிறார்.நாடு வக்குரோத்து நிலையை அடைந்துள்ளதால் சர்வதேச சமூகம் அகமது நாட்டிற்கு கடன் கொடுப்பதாக இல்லலை என்பதே உண்மையான கதை.

செலன்திவா நிறுவனம் மூலம் இந்நாட்டின் வளங்களை விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம் தவிர்ந்த ஏனைய பெறுமதியான சகல இடங்களையும் விற்று விடுவார்கள் போன்று தான் தோன்றுகிறது என்று மக்களிடம் ஓர் அபிப்பிராயம் உண்டு.பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக இந்நாட்டு மக்கள் அச்சப்படுகின்றனர் என்று கூறும்போது,நாடு கொவிட் காரணமாகவே வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் காரணம் அல்ல.ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்நாட்டில் பெரும் வர்த்தகர்கள் மீது சுமத்தப்பட்ட வரி முறை ஒழிக்கப்பட்டு, அப்பாவி மக்கள் மீது வரி விதிக்கும் பொருளாதார முறை திணிக்கப்பட்டது.இதனால் அரச வருவாய் குறைந்து நாடு பாரிய பாதிப்பை சந்தித்தது. சீனி வரி மோசடி போன்றே இன்று சிகரெட்டுக்குப் வரி விதிக்கப்படவில்லை.அப்படி இருந்தும் சிகரெட் விலை உயர்ந்துள்ளது.சிகரட் வரியின் வருமானம் இலாபங்கள் சகலதும் குறித்த நிறுவனங்களுக்கே சென்றது.இதிலும் அரசு பெற வேண்டிய வரியை சிகரெட் நிறுவனம் பெற்றது.அந்த நஷ்டம் ரூ.377 பில்லியனாகும்.இந்த சிகரட் வரி விதிக்கப்பட்டிருந்தால் இதன் மூலம் பெரும் அரச வருமானம் மூலம் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம்.வரி வருமானத்தில்

ரூ.3000 கோடி தான் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு செலவாகும்.இந்த வருமானத்தையும் தனது நண்பர்களுக்கே வழங்கியது.

பொருளாதாரச் சரிவுக்கான சிறந்த உதாரணம் சுதந்திர வலயத்தில் ஒன்றரை இலட்சம் போருக்கு வேலைகள் இல்லாமல் போனதாகும்.விவசாய ஏற்றுமதி சரிந்துவிட்டது.எண்ணெய் இல்லை, உரம் இல்லை, பூஞ்சைக்கொல்லிகள் இல்லை.பீடை நாசினிகள் இல்லலை.நம் நாட்டில் பெரிய தொழில் நுட்பம் இல்லை.எவ்வளவு மனித தேவை இருந்தாலும் நெல் விதையின் விலை உயரும் போது அவை அனைத்தினதும் விலைகள் கூடுகிறது.
ஏற்றுமதிப் பொருளாதாரம், விவசாயப் பொருளாதாரம் என்பவற்றுக்கு என்ன ஆயிற்று?அதனால் அவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இறக்குமதிக் கட்டுப்பாட்டினால் ஏற்றுமதிக்கும் சரிவு ஏற்பட்டது. சிறந்த உதாரணம் தான் ஆடைத் தொழிலின் வீழ்ச்சி.ஆடைத் தொழிலுக்குத் தேவையான போத்தான்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை உண்டு.இவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.வெளிநாட்டில் இருந்து கொண்டு வர வழியில்லை.மாற்றீடுகள் சமர்ப்பிக்கப்படாது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள் தான் இது.

உணவு சார்ந்த இறக்குமதியை கட்டுப்படுத்தக் கூடாது என்கிறார் திரு.பந்துல குணவர்தன.உணவு இறக்குமதியை கட்டுப்படுத்தக் கூடாது என்று பொது ஊடக விவாதத்தில் தெரிவித்தார்.அரசாங்கம் சரியாக என்ன செய்கிறது என்று அவர்களுக்கே தெரியவில்லை. மெதமுலன சாப்பாட்டு மேசையில் எடுக்கப்பட்ட முடிவுகளே நடைமுறைப்படுத்தப்படுகிறது.மக்கள் இன்றைக்கு அவதிப்படுகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அகற்றப்பட்டுள்ளது.இதனால் விரும்பியவர்கள் விரும்பிய விலைக்கு பொருட்களை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அரிசிக்குக் கட்டுப்பாட்டு விலை இல்லை.இல்லை கறுப்புச் சந்தைக்காரர்களால் தான் விலைகள் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் கணக்காய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, ​​நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மக்கள் மீது பழி சுமத்தப்படும் என்று அரசாங்கம் கூறியது.அது நியாயமாக இருக்காது.நம் நாட்டில் இருபத்தி ஒரு விமானங்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றன.இவை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கொள்வனவு செய்யப்படுகிறது.அதற்கான குத்தகையை செலுத்த வேண்டும்.சுமார் 7000 பணியாளர்கள் உள்ளனர்.ஒரு விமானம் சுமார் 300 பணியாளர்களை பராமரிக்கிறது. கட்டுப்படியாகாத வரி நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்களைத் தக்கவைக்க இந்த நாட்டின் பணத்தைப் பயன்படுத்துகிறோம்.மக்களிடம் இருந்து எடுக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டமாக இம்முறை வரவு செலவுத் திட்டமாக அமைந்து விடுமோ என்று எமக்கு பிரச்சிணை உள்ளது.
இப்போது ஏழெட்டு மூளையுடன் யோசித்து வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்.ஆனால் எதிர்காலத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் நுரோச்சோலை அனல் மின் நிலையத்துக்குப் பிரச்சினை ஏற்படும் என்று பத்திரிகை மூலம் பார்த்தோம்.இதனால் மக்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் போகும் என்று சொல்லப்படுகிறது.நாளை தொடர்பாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் தங்குவதற்கு வழியில்லாத நிலை ஏற்படும்.தண்ணீரும் எரிவாயுவும் இல்லை.திரு.சமல் ராஜபக்ஷ அவர்கள் சொன்ன கதைகள் களத்தில் இறங்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

திரு.மகிந்தானந்த அளுத்கமகே சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்துள்ளார்.திருடனுக்கு முன் வேலி குதிக்கிறார் என்பது தெளிவாகிறது.மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும் புரிகிறது, எனவே இவர்கள் தங்களின் தவறுகளை மறைக்க நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள் என நினைக்கிறேன்.சிறு குழந்தையும் கூட மோசடி நடந்துள்ளது என்பதை இந்த நாடு புரிந்துகொண்டுள்ளது.எனவே மக்களிடம் நகைச்சுவையாக பேசுவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :