சாய்ந்தமருது பிரதேச முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர் முஹம்மத் எழுதிய "எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்" என்ற நூலின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை (27) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான் விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கிறனர்.
ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எச்.ஏ.பஷீர், எம்.எம்.றஹீம், பேஜஸ் புத்தக இல்லத்தின் பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹூர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம்.நளீர் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தவுள்ளதுடன் பிரபல தொழிலதிபர் இக்ராஹ் யூ.சத்தார் நூலின் முதற் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
0 comments :
Post a Comment