மலையகத்திலும் ஆசிரியர்கள் போராட்டம்



க.கிஷாந்தன்-
திபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (09.11.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டகலை நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொட்டகலை புகையிரத கடவைக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன், பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் கொட்டகலை பிரதேச சபை வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதற்கு உடனடி தீர்வு வேண்டும். இனியும் காலம் இழுத்தடிக்கப்படக்கூடாது என அதிபர், ஆசிரியர்கள் வலியுறுத்திக்கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :