கிண்ணியாவில் நடைபெற்ற கேரச்சம்பவத்திற்கு காரணகர்த்தாக்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும். மாறாக இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு ஆளாக்க வேண்டாம் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம். ஸியா அறிக்கையொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, கிண்ணியா சட்டத்தரணிகள் சங்கம் எடுக்கும் சட்ட நடவடிக்கைகள் இனி இலங்கையில் எந்தப்பகுதியிலாவது ஏதாவது ஓர் ஒப்பந்த கட்டுமானங்களோ அல்லது வேறு ஏதாவது ஒப்பந்தங்களோ இடம்பெறும் போது சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள், ஒப்பந்தகாரர்கள், அரசியல்வாதிகளிற்கு ஓர் பாடமாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது அவாவாகும். கிண்ணியா சட்டத்தரணிகள் சங்கம் சட்ட நடவடிக்கைகளிற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்வதற்கு உங்களில் ஒருவனாக நான் தயாராக உள்ளேன் என்ற செய்தியையும் அறியத்தருவதுடன் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்கு ஒன்றிணைவோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment