உலக முஸ்லிம் பெண்எழுத்தாளர்களின் ஆற்றலை மேம்படுத்துவதே நோக்கம். எனகிறார்'பென்கிளப்' ஸ்தாபிதத்தலைவர் கவிதாயினி மஷூறா ஏ மஜீட்



வி.ரி.சகாதேவராஜா-
லகெங்கனும் வாழும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தவென ஆரம்பிக்கப்பட்டதே "பென்கிளப் "என்ற டிஜிடல் அமைப்பு.முஸ்லீம் பெண்களின் படைப்புகளை தொகுத்து வெளியிடுவதும் அடுத்த நோக்கம். அதன் பிரதிபலிப்பாக வரவிருப்பதே 'சுட்டுவிரல்' என்ற கவிதைத்தொகுப்பு நூலாகும்.

இவ்வாறு சாய்ந்தமருதில் இடம்பெற்ற அறிமுகநிகழ்வில் உரையாற்றிய 'பென்கிளப்' ஸ்தாபிதத்தலைவர் கவிதாயினி மஷூறா ஏ மஜீட் தெரிவித்தார்.

பென்கிளப் அமைப்பு வெளியிடவிருக்கின்ற "சுட்டுவிரல்" கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா தொடர்பான முதல் அமர்வு சாய்ந்தமருது அல்ஹிலால் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமையன்று தலைவி மஷூறா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக உபதலைவியும் அல்ஹிலால் பிரதிஅதிபருமான கவிதாயினி முஜாமலா வரவேற்புரை நிகழ்த்த செயலாளர் கவிதாயினி வானம்பாடி றிப்காஅன்சார் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

அங்கு ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தௌபீக், உதவிக்கல்விப்பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

அங்கு தலைவி மஷூறா மேலும் உரையாற்றுகையில்:

தற்போது உலகளாவியரீதியில் 145முஸ்லிம் பெண்எழுத்தாளர்கள் எமது அமைப்பில் உறுப்பினராகவுள்ளனர். முஸ்லிம் பெண் எழுத்தாளர்களது ஆற்றலுக்கான களங்களை களங்களை வியாபித்துக்கொள்ள வழிகாட்டுவது.கலாசாரத்தினூடாக கலையிலக்கியங்களைக் கட்டியெழுப்புவது.

இலைமறை காயாகவிருக்கும் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களை படைப்புலகிற்கு கொண்டு வருவது.எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் அமைப்பினை வியாபிப்பது.

அவசியமான கலையிலக்கிய நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் தேர்ச்சியடையும் பொருட்டு பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு பயிற்சிப்பட்டறை நடத்துவது.இஸ்லாத்தில் பெண் உரிமை பற்றிய அறிவை அங்கத்தவர்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பேற்படுத்துவது.இலக்கியத்திற்கு மேலதிகமாக எதிர்காலத்திலா கவின்கலைகளின் வளர்ச்சிக்கும் உழைப்பது.
இவ்வாறான நோக்கங்களைக்கொண்ட நாம் முகநூல் செயலியில் பலவித படைப்புகளை தினமும் படைத்துவருகிறோம். ஆதரவு தாருங்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :