அத்தனகலு ஓயா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், மினுவாங்கொடை - கட்டுநாயக்க வாகனப் போக்குவரத்துக்கு தடை



மினுவாங்கொடை நிருபர்-
சீரற்ற கால நிலை காரணமாக, கலஹுகொடை - எவரிய வத்தை வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், கட்டுநாயக்க விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலைக்குச் செல்லக் கூடியவர்கள், ஆண்டி அம்பலம வீதியைப் பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மினுவாங்கொடை நகர மையத்தின் ஊடாகச் செல்லும், அத்தனகலு ஓயா ஆற்றின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால், கோவின்ன மற்றும் ஹீனட்டியன பிரதேசங்களின் ஊடாகச் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கோவின்ன ஊடாகச் செல்லும் மினுவாங்கொடை - கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை ஊடாகச் செல்லும் நிட்டம்புவ - கட்டுநாயக்கவுக்கான பஸ் போக்குவரத்துச் சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர, தொடர்ச்சியாக இன்னும் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யுமிடத்து, மினுவாங்கொடை - கொழும்பு வீதியில் கொட்டு கொடையில் அமைந்துள்ள அத்தனகலு ஓயா ஆற்றினது நீர் மட்டமும் அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :