ஆசிரியா்களது பிரச்சினைகளை பொதுஜன பெரமுன ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மட்டுமே தீர்த்துக் கொடுக்க முடியும்.



அஷ்ரப் ஏ சமத்-
சிரியா்களது சம்பளம் மற்றும் பதில் அதிபா்களை நிரந்தரமாக்குதல் போன்ற ஆசிரியா்கள் அதிபா்களது பல பிரச்சினைகளை எமது பொதுஜன பெரமுன ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும். 
எதிா்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியா்களது சம்பள அதிகரிப்பினை கட்டம் கட்டமாக இல்லாமல் முழுமையாக எதிா்வரும் ஜனவரியில் இருந்து வழங்கவேண்டும் என்ற எமது சம்மேளன கோரிக்கையை முன்வைத்து நாளை 10ஆம் திகதி பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச அவா்களை எமது கட்சியின் ஆசிரிய தொழிற்சங்கம் உறுப்பிணா்கள் சந்திக்கின்றனா் இச் சந்திப்பில் நிதியமைச்சா் கல்வியமைச்சா்களுடன் இணைந்து பேச்சுவாா்த்தை ஒன்றை நடாத்தி தீர்மாணம் ஒன்றை எடுப்போம். என தொழிற்சங்கவாதியும் மின்சக்தி அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார்.

நேற்று(09) இலங்கை மன்றக் கல்லுாாியில் ஸ்ரீலங்கா பொதுசனப் பெரமுனை கட்சியினைச் சாா்ந்த ஆசிரிய தொழிற்சங்க அமைப்பின் 5வது சம்மேளன மாநாடு தலைவி திருமதி வசந்தா கந்தபான்கொட தலைமையில் நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு நாட்டில் நாலா பாகத்திலிருந்தும் 700க்கும் மேற்பட்ட பொதுஜனப் பெரமுன தொழிற்சங்க ஆசிரியர் மற்றும் அதிபா்களைக் கொண்ட உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் காமினி லொக்குகே - எமது கட்சியினைக் கொண்ட அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்சியில் இருக்கும்போது நமது ஆசிரியா்களது பிரச்சினைகளுக்கான தீா்வினை நாமே பெற்றுக் கொடுத்தல் வேண்டும். கடந்த மாதம் சகல தொழிற்சங்கங்களையும் பிரதமா் பாராளுமன்றத்தில் அழைத்து இரண்டு கட்டமாக சம்பளம் வழங்குவதை ஏற்றுவிட்டு ஸ்டான்லி,யலேவலே ஆமதுரு போன்ற தொழிற்சங்கத் தலைவா்கள் வெளியில் வந்து ஊடகங்களுக்கு வேறு கதைகளைச் சொல்கின்றாா்கள். இவா்கள் சில என்.ஜி.ஓக்களின் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்று தெய்வீகமான தொழில் செய்யும் ஆசிரியா்களை பிழையாக வழிநடத்துகின்றனா். இவா்கள் செயல்படுவது பொதுஜன பெரமுனை ஆட்சியை மாற்றுவதற்கும் அடுத்த தோ்தலினை குறி வைத்தே செயல்படுகின்றனா்
கடந்த ஜனாதிபதித தோ்தலிலும், பொதுத் தோ்தலிலும் பெரும்பாலான ஆசிரியா்கள் எமக்கே வாக்களித்தனா். இதற்கு சான்று தபால் வாக்குகளை கணக்கிடும்போது 80 வீதமான வாக்குகள் எமது கட்சிக்கே கிடைத்தது. ஆகவே எமது தொழிற்சங்கம் தான் எமது ஆசிரியா்களது சம்பளப்பிரச்சினைகள் மற்றும் பதில் அதிபா்களுக்கான நேர்முகப் பரிட்சைகளை நடாத்தி எதிா்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை நடாத்தி நியமனம் வழங்குதல் வேண்டும்.
இவ் விடயம் சம்பந்தமாக எமது தொழிற்சங்கம் கல்வியமைச்சராக பதவி வகித்த டலகஸ் அழகப் பெரும, பேராசிரியா் ஜி.எல். பீரிஸ் ஆகியோா்களது பல முறை பேசி தீாமாணங்களையும் எடுத்துள்ளோம். . என அமைச்சா் காமினி லொக்குகே அங்கு தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :