மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்க பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் !!





நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்-
னித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் சி.சி.ஏ.எஸ். கெம்பஸ் தவிசாளரும், அக்கரைப்பற்று கல்வி வலய ஆங்கிலப்பாட இணைப்பாளருமான செய்னுலாப்தீன் நஜ்முதீனின் தலைமையில் (14) சாளம்பைக்கேணி கமு/சது/ அஸ்ஸிராஜ் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள நாவிதன்வெளி கல்விக் கோட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக எடுத்துக்கொண்ட பல்வேறு தலைப்புக்களின் கீழான பயிற்சிபட்டறையில் கலந்து கொண்ட மானவர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஈ.எம்.பி. டேனியல், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எஸ்.எம்.எம். அமீர், இசட்.எம். ஹைதர் அலி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபா, சவளக்கடை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கிர், தேசிய போதைபொருள் மற்றும் ஒவுடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம்.ஜி. பஷீர் முஹம்மட் றிசாத், நளீர் பௌண்டசன் பிரதானி அபூபக்கர் நளீம், இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளர் நுவான் பெரேரா, தேசிய அமைப்பாளர் பிரியங்கர மென்டிஸ், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :