விவசாயிகளின் துயரங்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார் எதிர்க்கட்சித் தலைவர்.



நேற்றைய  (09) பாராளுமன்ற அமர்வில் கட்டளை நிலையியல் சட்டம் 27 (2) இன் கீழ் கேட்கப்பட்ட கேள்வி: 

விவசாயம் நாட்டின் மொத்த தொழிலாளர் சக்தியில் 25% பங்களிப்பதோடு,விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாகக்  கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களிக்கிறது.நாட்டின் மொத்த நிலப்பரப்பில், சுமார் 2.4 மில்லியன் ஹெக்டேர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது, அதன்படி 2010 வாக்கில் விவசாயிகளால் நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்ய முடிந்தது.  விவசாயிகள் மட்டுமின்றி வேளாண்மை வல்லுநர்கள், வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின் அர்ப்பணிப்பின் விளைவாக, 2019 இல் உலக உணவுப் பாதுகாப்புச் சுட்டெண்ணில் இலங்கை 66 ஆவது இடத்தைப் பிடித்தது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் இரசாயன உரங்களுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளதால்,தோட்டப் பயிர்கள் உட்பட முழு விவசாயத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நாடு ஒரு தொற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு பஞ்சத்தால் பாதிக்கப்படவில்லை என்றால் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயம்.ஆனால், ஒரு நாட்டில் விவசாயம் குறித்து இவ்வளவு தீவிரமான முடிவை எடுப்பதற்கு முன், அது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளும், முன்னுதாரணங்களும், போதிய ஆய்வுகளும் நடந்துள்ளதா என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.  இது அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதான முடிவுகளேயன்றி,வெறும் அரசியல் முடிவாக எடுக்கக் கூடாது.  ஏனென்றால், அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் அதன் விளைவுகள் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மோசமாகப் பாதிக்கக் கூடும்.இரசாயன உரங்களின் பயன்பாடு தொடர்பான இந்த அறிவியல்பூர்வமற்ற,கட்டுக்கதைகள் மற்றும் தன்னிச்சையான முடிவுகள் நாட்டின் பல முக்கியமான துறைகளை கடுமையாக பாதித்துள்ளது.அதிகரித்து வரும் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இலங்கை உணவு உற்பத்தியில் வருடாந்தம் குறைந்தது 1% அதிகரிப்பைக் காண வேண்டும்.  எவ்வாறாயினும், அனைத்து தொழில்நுட்ப நியமங்களின் கீழும் மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாயத்தில் விளைச்சல் 21% - 30% வரை குறைவடைந்துள்ளதாக பதலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளது. அப்படியானால், கரிம உரத்தில் மட்டுமே பயிரிடுவது உடனடி உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான முன்னோடியாக அமையும்.

இரண்டாவதாக, நெற் செய்கைக்கு மேலதிகமாக,தேயிலை, இரப்பர்,தென்னை, காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் பிற பயிர்களின் விளைச்சல் மற்றும் அவற்றின் தரம் குறையும் அபாயம் உள்ளது.இதனால் பல நூறு ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சிலோன் தேயிலையின் பெயர் உலகச் சந்தையில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளியேறுவதுடன் இலவங்கப்பட்டை உள்ளிட்ட பிற ஏற்றுமதிப் பயிர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும்.

மேலும் குறைந்து வரும் விளைச்சலால் நெல் ஆலைகள்,தொழிலதிபர்கள், விநியோக தாரர்கள் மற்றும் இவற்றில் தங்கியுள்ள பல விவசாய வணிகங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதியில், இந்தச் சுமை அனைத்தும் நுகர்வோர் மீது விழுந்து, மேலும் அது பெரும்பாலும் அவர்கள் கையில் பணம் இருந்தாலும் ரேஷன் அடிப்படையில் உணவைத் தேடும் அளவிற்கு வளரலாம்.

மேலும், உள்நாட்டில் போதிய உணவு விநியோகம் இல்லாதபோது, ​​அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.  இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் சிக்கல் இருக்கலாம், இது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

இந்த அனைத்து காரணிகளுக்கும் மேலாக அரசின் இந்த முட்டாள்தனமான முடிவால் நாடு மேலும் இரண்டு கடுமையான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது.அதாவது, அனைத்து கொள்முதல் செயல்முறைகளையும் பயன்படுத்தி கரிம உர வெறி மூலம் ஒரு புதிய வணிக உயர் வர்க்கம் உருவாக்கி, அதன் மூலம் கமிஷன்களைப் பெறுவதற்கு, சரியான ஆராய்ச்சி முடிவுகளால் சான்றளிக்கப்படாத நச்சு உரங்கள் மற்றும் நானோ நைட்ரஜன் உரங்களின் இறக்குமதியைத் தொடங்குவதாகும்.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சட்டம் (Plant quarantine Act)வெளிப்புற உயிரியல் உள் நுழைவில் இருந்து நமது பல்லுயிர் கொண்ட சிறிய தீவை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது.கரிம உரங்கள் என்று அழைக்கப்படும் இந்த தரங்களால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட கப்பல்கள் இப்போது இலங்கையைச் சுற்றி வலம் வந்து அடையாளம் காணப்பட்ட உரங்களை எப்படியாவது எங்கள் தாய்நாட்டிற்கு இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இந்த சூழ்நிலைகளை சிக்கலாக்கும் வன்னம் நமது விவசாய நிலத்தை பெரிய அளவிலான பரிசோதனைக் களமாக மாற்ற,போதுமான அளவு தரப்படுத்தப்படாத மற்றும் உள்நாட்டில் பரிசோதனை செய்யப்படாத மில்லியன் கணக்கான லீட்டர் நானோ நைட்ரஜன் உரம் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.வேளாண்மை வல்லுநர்கள், மண் தொடர்பான வல்லுநர்கள் மற்றும் பயிர் சார்ந்த வல்லுநர்கள் (மருத்துவ வேளாண்மை வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கூட) இந்த தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நச்சுகளை கொட்டுவதால் ஏற்படும் விளைவுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால், அவர்கள் எதற்கும் செவிசாய்க்காமல், மக்களின் உணவுப் பாதுகாப்பையும், வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த நிலத்தையும் அரசாங்கம் தொடர்ந்து மாசுபடுத்தி வலுகிறது.

தன்னிறைவு பெற்ற விவசாயப் பொருளாதாரம் என்று சொல்லிக் கொள்ளும் நமது விவசாயிகளை விவசாயத்தில் இருந்து திட்டமிட்டு அகற்றும் முயற்சிதான் மற்ற ஆபத்தான விடயமாகும்.முதலாவதாக, போதுமான உற்பத்தி காரணிகளை வழங்காமல் விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துகிறது. இரண்டாவதாக, அவர்கள் தங்கள் விளை நிலங்களை ஒவ்வாத விஷ உரங்களைக் பயன்படுத்தி தரிசு நிலங்களாக மாற்றுவார்கள்.விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக அறிவித்து கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படும் நோக்கில் விவசாய நிலங்களை பாழாக்குவதற்கு அரசாங்கம் அடிக்கல் நாட்டுகிறதா என்ற பலத்த சந்தேகங்களை இது எழுப்புகிறது.

இதன்படி, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதுவதுடன், பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

1. பதலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளபடி,காபனிக் விவசாயத்தினால் நெல் அறுவடை குறைவடைந்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?அப்படியானால், சந்தைக்கு போதுமான அரிசி வரத்து இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

2. 1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேசிய தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மூன்றாம் நபரின் பரிந்துரையின் பேரில் கரிம உரங்கள் என முத்திரை குத்தப்பட்ட உரங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதிக்குமா?  இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, கடந்த காலங்களில் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையால் நிராகரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, எதிர்காலத்தில் அத்தகைய நிறுவனங்கள் விண்ணப்பித்தால், மூன்றாம் தரப்பினரின் பரிந்துரையுடன் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுமா?

3. நானோ நைட்ரஜன் உரங்கள் மனித ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று தங்களிடமுள்ள உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் என்ன? அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமா? இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் உரங்கள் கள அளவில் உள்நாட்டில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டதா? அப்படியானால், அந்த ஆய்வு அறிக்களை சமர்ப்பிக்கிறீர்களா?  இல்லை என்றால், ஏன் இல்லை?

4. இரசாயன உரத் தடையால் நெல், தேயிலை, இரப்பர்,தென்னந்தோப்பு மற்றும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பயிர்களின் விளைச்சல் குறைந்ததால் ஆதரவற்ற நிலையில் உள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் திட்டம் என்ன? அந்த விளைச்சலின் குறைப்பைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் தரவு முறைமை என்ன?

5. விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :