ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 91 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்ற எக்டிவ் பிரண்ட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் மிருக வைத்தியர் எஸ்.சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தரம் ஐந்து புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம், கா.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் சாதனை படைத்த அமைப்பிலுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட், ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.எல்.பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment