நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கு சமமான சட்டம்தான் நிர்வாகத்தில் இருத்தல் வேண்டும். -பேராசிரியை வசந்தா செனவிரத்தின



அஷ்ரப். ஏ .சமத்-
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் சடத்துறை பீடத்தின் தலைவி பேராசிரியை வசந்தா செனவிரத்தன ஜனாதிபதி நியமிக்கப்பட்ட மனித உரிமை மற்றும் முன்னைய ஆணைக்குழுவின் அறிக்கைகளை விசாரிக்கும் குழுவின் அமா்வில் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தார் இவ் அமா்வு நேற்று முன்தினம் (19) பி.எம். ஜ.சி.எச் ல் நடைபெற்றது. இவ் ஆணைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதியரசருமான து. நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த பேராசிரியை வசந்தா செனவிரத்தின

இந்த நாட்டில் -ஒரு நாடு ஒரு சட்டம் என்கிறார்கள், அப்படி எங்கு உள்ளது ? . இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கு சமமான சட்டம்தான் நிர்வாகத்தில் இருத்தல் வேண்டும்.

நான் வடக்கில் யாழ்ப்பாணம் சென்றால் அங்கு எனக்கு தமிழ் மொழி தெரியாது எனது அலுவல்களை அங்கு செய்து கொள்ள முடியாதுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம் அல்லது வடக்கு மக்கள் தெற்கு அல்லது கொழும்பு வந்து தமது அன்றாட பிரச்சினைகளை இங்கு தீா்த்துக் கொள்ள முடியாமல் உள்ளது. நாம் பாடசாலைக் கல்வியில் இருந்தே 1 ஆம் ஆண்டிலிருந்தே பிறிந்தே வந்திருக்கின்றோம். சகல விடயங்களிலும் இன,மொழி ரீதியாகவே பிரிந்து நிற்கின்றோம்..

உதாரணமாக பம்பலப்பிட்டியில் பிரதேசத்தினை எடுத்துக் கொண்டால் அங்கு நான்கு இன ரீதியாக உள்ள பாடசாலைகள் உள்ளன.

பம்பலப்பிட்டியில் விசாக்கா வித்தியாயலயம் பௌத்த மாணவிகளுக்கானதொரு பாடசாலையாகும்., பம்பலப்பிட்டி ஹிந்து பெண்கள் கல்லுாாி, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாி பம்பலப்பிட்டி சென் போல்ஸ் கல்லுாாி என நாம் இன ரீதியாகவும் பாடசாலைகளயும் பிரித்து அமைத்து பெயா்வைத்து நாமே பிரித்து வைத்திருக்கின்றோம். நான்கு இனங்களையும் சாா்ந்த மாணவிகள் ஒரே கூரையின் கீழ் உள்ள ஒரு வகுப்பறையில் கற்கும் சா்ந்தர்ப்பத்தினை பாடசாலை மட்டத்தில் இருந்தே நாம் இல்லாமல் செய்து பிரித்து வைத்துள்ளோம். அப்படியானால் இந்த நாட்டில் எங்கு தேசிய நல்லிணக்கம் இந்த நாட்டில் உருவாகும் ? எனக் கேள்வி எழுப்பினார்?
இந்த நாட்டில் உள்ள எமது ஸ்ரீலங்கா கிறிக்கற் அணியைப் பாருங்கள்.
அதில் இந்த நாட்டில் உள்ள ஏனைய தமிழ் , முஸ்லிம் ,வீரா்கள் உள்ளனரா ? அதற்காகவே இந்தியா அணி வெற்றிபெற்றால் இலங்கையில் உள்ள தமிழா்கள் இந்தியாவுக்கு கைதட்டுகின்றனா். பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற்றால் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கு கைதட்டுகின்றாா்கள். ஆனால் ஏனைய நாடுகளைப் பாருங்கள் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆபிரிக்காவில் கூட அந்த நாட்டில் பிறந்த சகல இனத்தவா்களும் அந்த கிறிக்கட் குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனா்.

தேசிய நல்லிணக்கம் என்பது கருப்பு வெள்ளை தாள்களிலேயே உள்ளது அதனை அரசியல்வாதிகள் அதிகாரிகள் அமுல்படுத்துவதில்லை இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களை இரண்டாம் தர பிரிஜையாகவே கருதுகின்றனா். நாம் எல்லோறும் சம தர்மத்துடன் சகல உரிமைகளுடன் இலங்கையர் என்ற ரீதியில் வாழ்வதற்கு இந்த நாடு புதிய சட்டங்களை உருவாக்கி உரிய உரிமைகளை வழங்குதல் வேண்டும்.
ஒரு நாட்டில் யுத்தம்மொன்று நடைபெற்றால் அந்த யுத்தம் பற்றி அந்த யுத்தத்தில் இறந்தவா்கள் காணாமல் போனவா்கள் பற்றி அடி மட்டத்திற்குச் சென்று அந்த அவா்களது பிரச்சினைகளை கோட்டறிந்து உரிய நிவாரணம் வழங்கி அங்கு இறந்தவா்கள், அகதி முகாம்மில் வாழ்ந்தவா்கள் மறுவாழ்வு நஸ்ட ஈடுகள், கானிப்பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திகள் என புனா் வாழ்வு புனரமைப்பு போன்றவைகள் அங்கு நடைபெற்றிருத்தல் வேண்டும். அதனையே சர்வதேச நாடுகளும் சிவில் அமைப்புக்கள் மத்தியில் இலங்கை பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படும்.

ஒரு சாரரை மட்டும் திருப்தி படுத்தாமல் இரு சாரரையும் விசாரி்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுத்திருத்தல் வேண்டும். தென் ஆப்பிரிக்கா, பங்களதேஸ் போன்ற யுத்தம் நடைபெற்ற நாடுகளில் உண்மையை கேட்டறியும் ஆணைக்குழு அமைத்து பாதிக்கப்பட்ட மக்களது காலடியில் சென்று அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஜ. நா. மனித உரிமை ஆணைக்குழு எதிா்பாா்கக்படுகின்றது. இதற்காகவே அந்த அமைப்பில் மனித உரிமை விடயத்தில் பல்லின மக்கள் வாழும் நாடு அல்லது ஒரு நீண்ட கால யுத்தம் நடைபெற்ற நாடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :