உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சாபமே நாட்டில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வருவதற்கு காரணம்:- எதிர்க்கட்சி!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
யிர்த்த ஞாயிறு தாக்குதலின் சாபமே நாட்டில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வருவதற்கு காரணமாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காதவரை இந்த அரசாங்கத்துக்கு எதிர்காலமே இல்லை. அத்துடன் அரசாங்கம் பயங்கரவாதிகளை கணடுபிடிப்பதற்கு பதிலாக அருட்தந்தைகளுக்கு பின்னால் செல்கின்றது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் என்ற சந்தேகம் எழுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:-
2022ம் ஆண்டுக்குரிய பட்ஜெட் மூலம் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும், நிவாரணம் கிடைக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவுமே மக்களுக்கு கிடைக்கவில்லை. உரப்பிரச்சினையால் மரக்கறி விலை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் இந்த பட்ஜெட் மூலம் தீர்வு இல்லை.

புதிய பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருளுக்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. கேஸ் பற்றாக்குறையால் மக்கள் காலையில் வரிசையில் நின்று வருகின்றனர். அதேபோன்று யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு CEBயின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்சாரப் பிரச்சினை நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு வழி ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் இந்த அரசாங்கத்துக்கு ஒப்படைக்கும் போது நாட்டின் அந்நியச் செலாவணி $7.2 Billionயை மீதப்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போது அந்நிய செலாவணி இருப்பு $2.2 Billion வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் $7 Billion வெளிநாட்டுக்கு கடன் செலுத்த வேண்டியிருக்கின்றது. எமது நிதிப் பிரச்சினையின் காரணமாக வெளிநாடுகளே எமக்கு கடன் வழங்குமா என்ற சந்தேகம் எழுகின்றது. தமது நாடு அண்டை நாடான பங்களாதேஷிடம் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிதி தரப்படுத்தலில் எமது நாடு மேலும் கீழ் மட்டத்திலேயே இருக்கின்றது. டொலர் பிரச்சினை காரணமாக எமது வங்கிக் கட்டமைப்பு கடும் வீழ்ச்சியடையும் நிலையிலே உள்ளது.

எமது உறுப்பினர்களுக்கு நிதியொதுக்குவதன் மூலம் எமக்குள்ள பிரச்சினைகளிலிருந்து மீள முடியும் என நிதியமைச்சர் நினைக்கின்றார். நாடு இன்று நாளுக்கு நாள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சாபமே இதற்கு காரணமாகும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காதவரை இந்த அரசாங்கத்துக்கு எதிர்காலம்
இல்லை. அரசாங்கம் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக இன்று அருட்தந்தை சிறில் காமினியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றது. குண்டை வெடிக்கச் செய்தது கத்தோலிக்க சபை போன்றே குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைத்து விசாரணை செய்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லுமா என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே கத்தோலிக்க சபையை அச்சுறுத்தி, அருட்தந்தைகளை கைது செய்து இந்த பிரச்சினைக்கு நிச்சயமாக தீர்வு காண முடியாது. இறைவனின் தண்டனையே கிடைக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :