மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலைகள் அமைச்சு-

ண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே மற்றும் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

சில வீதிகள் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் இவ்வாறு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் கட்டிட ஆய்வு நிறுவன நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த வீதிகள் தொடர்பாக ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :