சீனாவுக்கு பயந்து உருமாறிய கொரோனா வைரஸின் பெயர் மாற்றம்! உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு உலக நாடுகள் கண்டனம்!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சீனாவுக்கு பயந்து, புதிய உருமாறிய கொரோனா வைரஸின் பெயரை உலக சுகாதார ஸ்தாபனம் மாற்றியுள்ளதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மரபணு மாறி புதிய வகை வைரஸாக உருமாறி வருகின்றன.

உருமாறிய கொரோனா வைரஸை அடையாளப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் கிரேக்க எண் கணித அடிப்படையில் புதிய பெயர்களை சூட்டி வருகிறது. இதன்படி அல்பா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எண்களின் அடிப்படையில் உருமாறிய கொரோனா வைரஸுக்கு பெயர் சூட்டப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அவ் வைரஸுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஓமீக்ரோன் என்று பெயர் சூட்டியுள்ளது. கிரேக்க எண் கணித வரிசையில் தென்னாப்பிரிக்க வைரஸுக்கு, நியூ (Nu) என்றே பெயர் சூட்டியிருக்க வேண்டும். புதிய வைரஸ் என்று அர்த்தம் வருவதால் அதனை உலக சுகாதார ஸ்தாபனம் தவிர்த்தது. அதற்கு அடுத்து 14வது கிரேக்க எண்ணான ஜிசாய் (Xi) என்று புதிய உருமாறிய வைரஸுக்கு பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆனால் அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் (Xi jinping) பெயரும் கிரேக்க எண்ணின் பெயரும் ஒத்துப் போவதால் அதை தவிர்த்து, உருமாறிய கொரோனா வைரஸுக்கு 15வது கிரேக்க எண்ணான ஒமீக்ரோன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் முடிவுக்கு பல்வேறு நாட்டவர்களும் தமது எதிர்ப்பை சமுக வலைத்தளம் மூலமாக தெரிவித்துள்ளனர் "சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினர் அஞ்சுகிறது. அந்த அமைப்பை எவ்வாறு நம்ப முடியும். உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் பல உண்மைகளை மூடி மறைக்கக்கூடும்" என்றும் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானான் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். சீனாவின் ஆதரவுடனேயே உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.


கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியபோது, சீனா அரசாங்கம் பல உண்மைகளை மூடி மறைத்தது. இதற்கு உலக சுகாதார ஸ்தாபனமும் ஒத்துப் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. தற்போது மீண்டும் சீன ஜனாதிபதிக்கு சாதகமாக உலக சுகாதார ஸ்தாபனம் செயல்படுவதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :