கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.யாழினி ஆகியோர் முன்னிலையில் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதில், தலைவராக எஸ்.எல்.சாஜஹான், செயலாளராக எஸ்.ஐ. தெளபிக், பொருளாளராக, ஐ. பதுர்தீன், உப தலைவராக எச்.எம். கலில் ரகுமான், உப சௌயலாளராக எம்.யூ. தைய்யிபா ஆகியோர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக, ஏ.எம்.நிஸாம்டீன், கே.எல்.இஜாஸ், ஐ.இமான், பாத்திமா றம்சியா உம்மா, எம்.எம்.சாபி, ஏ.எல்.ஜலால்தீன், எம்.ஏ.எம்.காசிம் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், அமைப்பின் ஆலோசர்களாக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர், எஸ்.எம்.பீர் முகம்மட், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், அமைப்பின் கணக்காளராக ஏ.எம்.ஹமீட் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment