ஆரோக்கியமான கர்ப்பகாலம் (மருத்துவம்)



பகுதி 1
கருத்தரித்தல் மற்றும் குழந்தைப்பேறு ஒவ்வோர் குடும்பத்தினதும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். இது இயற்கை நிகழ்வாயினும் சிலரில் பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக ஏற்கனவே நோய்கள் உள்ள பெண்களில் அல்லது அந்நோய்நிலைமைகள் அடையாளம் காணப்படாதிருந்தவர்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆரோக்கியமான கர்ப்பகாலம் ஒவ்வோர் கர்ப்பிணித்தாய்மாரினதும் எதிர்பார்ப்பாகும்.

கர்ப்பம் தரிக்க 3 மாதங்களுக்கு முன்னிருந்தே Folic acid 1mg மாத்திரைகளை பாவிக்க வேண்டும். இதனால் குழந்தையின் நரம்புத்தொகுதியில் ஏற்படக்கூடிய சில குறைபாடுகளை தவிர்க்கலாம்.
 
சிலரில் 5mg எடுக்கவேண்டும்
1. முன்னைய குழந்தைக்கு Cleft Lip/ Palate ( அதாவது உதடு உருவாகும் போது அது சேராது காணப்படல்), முள்ளந்தண்டு முற்றாக உருவாகாது இடைவெளி காணப்படல்.
2. நீரிழிவு நோய் உள்ள பெண்கள்.
3. வலிப்பு நோய்க்காக மருந்து பாவிப்பவர்கள்.

Ultrasound Scan & Pregnancy
கர்ப்ப காலத்தில் பல்வேறு கட்டங்களில் scan பரிசோதனைகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றன
குழந்தையின் வளர்ச்சி சரியான முறையில் நடைபெறுகின்றதா , குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பதை அவதானிக்க scan பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இப்பரிசோதனையில் ultrasound waves அதாவது நமது காதிற்கு கேட்கமுடியாத உயர் அலையுடைய ஒலிஅலைகள் பயன்படுத்தப்படும். இவை மிகவும் பாதுகாப்பானது. குழந்தையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கர்ப்பம் தரித்தவுடனே அடுத்தகட்டமாக, கருப்பையினுல் பதிந்துள்ளதா இல்லாவிட்டால் வெளியில் அமைந்திருக்குமோ என பலரும் பயந்து Urine Pregnancy Test பார்த்தவுடனேயே Scan பரிசோதனைகளுக்காக விரைவதுண்டு.
எனினும் அவ்வாறு Ectopic Pregnancy கருப்பைக்கு வெளியில் குழந்தை அமைவதற்கான வாய்ப்பு நூற்றுக்கு 5 வீதத்தை விடக்குறைவு.
Scan பரிசோதனையில் குழந்தையின் இதயத்துடிப்பு கடைசி மாதவிடாய் தினத்திலிருந்து குறைந்தது 6 வாரங்களாவது சென்றபின்னரே தெளிவாக காணக்கூடியதாக இருக்கும். அதற்கு முன்னர் இப்பரிசோதனைகளை செய்யத்தேவையில்லை. எனினும் இரத்தக்கசிவு ,அதிக வயிற்றுவலி ஏற்பட்டால் மட்டும் செய்ய வேண்டும்.

ஏனையவர்களில் முதல் scan ( Dating Scan/ கர்ப்பகாலத்தை சரி என உறுதிப்படுத்தும் scan ) பரிசோதனை 11-14 வாரங்களில் செய்தால் சிறந்தது
 
Dr முஹம்மத் முஸ்தாக்
MBBS , MD, MRCOG, MSLCOG
மகப்பேற்று மகளிர் விசேட வைத்திய நிபுணர்
தேசிய வைத்தியசாலை கண்டி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :