டொலர் வழங்குமாறு மத்திய வங்கிக்கு முன்னால் என்னால் போராட முடியுமா? அமைச்சர் உதய கம்மன்பில



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதாக காணப்படுவதால் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாகவே சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூடியுள்ளோம். இதனால் எரிபொருள் விநியோகத்துக்கோ, மின் விநியோகத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தினர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபடுவதால் டொலர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. வலுசக்தி அமைச்சர் என்ற ரீதியில் என்னால் டொலர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், டொலர் கோரி மத்திய வங்கிக்கு முன்னால் என்னால் போராட்டத்தில் ஈடுபட முடியாது என குறிப்பிட்டார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்:-
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத்திறக்குமாறு வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுட்டுள்ளதை அறிய முடிகிறது. கையிருப்பிலுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு நிதியை அத்தியாவசிய தேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. போராட்டங்களில் ஈடுபடுவதால் டொலர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு மசகு எண்ணெயை கொள்வனவு செய்ய முடியும் என்றால் நானும் போராட்டத்தில் இணைந்து கொள்ளத் தயார். போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை தொழிற்சங்கத்தினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வலுசக்தி அமைச்சர் என்ற ரீதியில் என்னால் டொலர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மசகு எண்ணெய் இறக்குமதிக்கு நிதியமைச்சு அனுமதி வழங்க வேண்டும்.அவ்வாறாயின் நானும் மத்திய வங்கியின் முன்பாக 'டொலர் தா என போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அது சாத்தியமற்றது. நிறுவனத்தை பாதுகாப்பதற்காக தூரநோக்கு சிந்தனையுடன் தீர்மானங்கள் எடுக்கும் போது அதற்கு தொழிற்சங்கத்தினர் ஆதரவு வழங்க வேண்டும். தீர்மானம் தவறாயின் அகற்றிவிட்டு மாற்று தீர்மானங்களை எவரும் முன்வைக்க முடியும். அவ்வாறு செயற்படுவதை விடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகில் பலமிக்க நாடுகள் வலுசக்தி துறையில் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில் கனிய எண்ணெய் உற்பத்தி செய்யாமல், டொலர் பிரச்சினையையும் எண்ணெய் களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட உ பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு தடையில்லாமல் எரிபொருள் விநியோகிப்பதையிட்டு மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.


மசகு எண்ணெய் இறக்குமதிக்கு இல்லாத டொலர் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாஸ வினவியுள்ளார். சப்புகஸ்கந்த எண் ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழமையானது. ஆகையால் ஒரு பீப்பாய் ஒன்றில் 14% பெற்றோலும் 29% டீசலும் பெற்றுக் கொள்ள முடியும்.கடந்த மாதம் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை $85 காணப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் டீசலின் விலை $93 ஆகும். பெற்றோல் பீப்பாயின் விலை $95 உயர்வடைந்துள்ளன. ஆகவே மசகு எண்ணெய் பெறுவதை காட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியதால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோக உரிமை இல்லாமல் போகும் என குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் மின்சாரத்துறை எம்மிடம் எரிபொருளை பெற்றுக் கொள்வதில்லை.

குறிப்பிட்ட வெளிநாட்டு கையிருப்பு ஊடாக கொண்டு வரப்பட்ட மசகு எண்ணெய் ஊடாக சுத்திகரிக்கப்பட்ட 13,500 மெற்றிக் தொன் எரிபொருள் பாவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மசகு எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் மின்துண்டிப்பு இடம்பெறும் என குறிப்பிடுவது மேலுமொரு பொய்யாகும். ஆகவே சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதால் நாட்டில் எரிபொருள் விநியோகத்துக்கோ மின் விநியோகத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கேள்வி: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பதில்: சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 37% நெப்தா, பெற்றோல் வகையிலான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நீர்மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக அவ்வுற்பத்திகளை மின்சாரத் துறை அமைச்சு பெற்றுக் கொள்ளவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
சீமெந்து, பால்மா, போன்ற ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :