இந்துசமயகலாசார திணைக்களம் விபுலாநந்தர் தொடர்பிலான இருநூல்கள் வெளியிட்டமைக்கு விபுலபுரிமண் வாழ்த்துகிறது!



காரைதீவு சகா-
ந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்தவாரம் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் ஆக்கங்களடங்கிய இருநூல்களின் வெளியிட்டுவைத்தது.அதற்காக விபுலமுனி பிறந்த எமது காரைதீவுமண்;; தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.

இவ்வாறுகூறும் வாழ்த்துச்செய்தியை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களபணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனுக்கு காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்ற முன்னாள் தலைவர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா அனுப்பிவைத்துள்ளார்.

'விபுலாநந்தம்' என்ற தமிழ்நூலும் என்ற "Essays of Svami Vipulananda"ஆங்கிலநூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது. இந்த நூல்களை இந்துசமய கலாசார திணைக்களம் பதிப்பித்தமை குறிப்பிடத்தக்கது.1008பக்கங்களுடன்கூடிய 'விபுலாநந்தம்' என்ற தமிழ்நூலும் 252பக்கங்களுடைய ஆங்கிலநூலும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனினால் இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ்ஜூக்கு வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இந்துசமயத்தின்கண் பலவாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படு;த்திவரும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வடக்கில் நாலவர் பெருமானையும் கிழக்கில் சுவாமி விபுலாநந்த அடிகளாரையும் முதன்மைப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதை உலகமறியும்.

குறிப்பாக சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த எமது புனித மண்ணாம் காரைதீவில் அவர் பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபம் போன்றவற்றில் பல வியத்தகு அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண்டது மட்டுமல்லாமல் சமய ஆன்மீக கலை கலாசார விடயங்களை முன்னெடுத்துவருவதும் அறநெறி சார்ந்த இன்னோரன்ன வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதும் பாராட்டுக்குரியது.

இலங்கை வரலாற்றில் அறநெறிப்புரட்சியை மறுமலர்ச்சியை ஏற்படுத்திவரும் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் இதுவிடயத்தில் எடுத்துவரும் கரிசனை அக்கறை முழுமூச்சான முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.அவருக்கு எமது மண்சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாத்சல்ய வாழ்த்துக்களையும் உதிர்க்கிறோம்.
அதன் உச்சக்கட்டமாக சுவாமி விபுலாநந்தர் எழுதிய ஆக்கங்களை தொகுத்து இருவேறு மொழிகளில் கனதியான இரண்டு நூல்களை வெளியிட்டு வைத்துள்ளமை எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது காலத்தால் அழியாத பொக்கிசங்கள் எனலாம்.

உலகப்பிரசித்திபெற்ற ஓவியர் த.பத்மவாசன் தயாரித்துவரும் சித்திரங்களுடான சுவாமியின் சரிதம் இந்து சிறார்களுக்கு பெரும் பயனுடையதாகவிருக்கும் என்பது எமது பெருநம்பிக்கை.

இதுபோன்று மேலும் பல நூல்களை சுவாமியின் பெயரால் வெளியிடவேண்டும். உண்மையில் அது உலகளாவியரீதியில் சுவாமிகளுக்குச்செய்யும் பாரிய கைங்கரியமாகும். அதனை தொடருவீர்களென்பது பெரும் நம்பிக்கையாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :