மயக்கமா கலக்கமா
++++++++
Mohamed Nizous
வெடிக்குமா எரிக்குமா
நடுக்கமா இருக்கும்மா
சிலிண்டரே வாணாம்மா
சிலிண்டர் என்றால்
சீக்கிரம் சமையல்
முடியும் என்றார்
முந்தி எடுத்தார்
சிலிண்டர் என்றால்
சீக்கிரம் சமையல்
முடியும் என்றார்
முந்தி எடுத்தார்
எடுத்த சிலிண்டர்
வெடிக்கும் போது
அடுத்த தெரிவு
அடுப்பில் விறகு
அடுத்த தெரிவு
அடுப்பில் விறகு
கட்டின் கீழே
கவனம் வெடிக்கும்
வெளியே வைப்பாய்
வயரால் இணைப்பாய்
ஏழை வயிறும்
சிலிண்டரும் ஒன்று
Empty ஆக
இருக்கும் இரண்டும்
ஏழை வயிறும்
சிலிண்டரும் ஒன்று
Empty ஆக
இருக்கும் இரண்டும்
அடுப்பு எரியா
அநேகர் வீட்டில்
வயிறு எரியும்
வாழ்க்கை கஷ்டம்
வயிறு எரியும்
வாழ்க்கை கஷ்டம்
கேஷும் இல்லை
கேஸும் இல்லை
தேசம் எங்கும்
தோசம் பொங்கும்
0 comments :
Post a Comment