கிண்ணியா குறிஞ்சாக்கேணிபாலத்தை நிர்மாணிக்க அப்பகுதித் அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்



நூருல் ஹுதா உமர்-
கிண்ணியா குறிஞ்சாக் கேணி இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் கேள்வியுற்று ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அறிக்கையில் இன்று காலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் உள்ள ஆற்றில் 20 மாணவர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள், மரணமடைந்தனர். இச்சம்பவம் கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

இது ஒரு மிகப் பரிதாமான சம்பவமாகும். இந்தப்பாலம் அமைக்க பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அமைக்கப்படாதது துரதிஷ்டவசமாகும். அது அமைக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வின் நாட்டம் இம் மரணங்களைத் தடுத்திருக்க முடியும். இப் பாலமானது நிர்மாணிக்க அப்பகுதித் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :