சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள்.

மூக ஊடகம் எனப்படுவது நமது கருத்துக்களை படிக்கவும் பகிரவும் இணையத்தின் மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம் அல்லது மேடை என்று கூட கூறலாம். சமூக ஊடகத்தில் பெரும்பாலான செய்தியை உருவாக்குவதும் பகிர்வதும் தனிமனிதரான நுகர்வோரே. அதனாலேயே இது பரவலாக எல்லோராலும் விரும்பப்படுகிற ஒரு ஊடகமாக தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. அத்தோடு சாதாரண மனிதனின் குரலை பொதுவெளியில் உரக்கச் சொல்கிற சாதனமாக இருப்பதால் ஒரு மனிதன் தன்னை சமூகத்தின் அங்கமாக உணருகிறான்.

சமூக ஊடகவியல் என்பது தற்காலத்தில் அனைவரும் இயங்குவதற்கு காரணமான ஒன்றாகமாறிவிட்டது. அதாவது உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் ,நமது வினாக்களுக்கு விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்களேயாகும். Facebook, Twitter, Instagram போன்ற முன்னோடி சமூக ஊடகதளங்களின் மூலமாக இளைஞர்களின் சிறப்பான பல ஆக்கங்களுக்கும் அங்கீகாரம் மிக எளிதாக கிடைக்கிறது. அதேபோன்று அனைவரும் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் சமூக ஊடகங்கள் உதவியாக காணப்படுகின்றது. அத்தோடு சமூக ஊடகங்கள் இல்லை என்றால் உலகமே நின்று போய்விடும் என்ற மனநிலை தற்காலத்தில் அனைவரது உள்ளத்திலும் தீயாக பரவிவிட்டது. எனவே கூறவேண்டும். ஆண்,பெண் என்ற பாலின வேறுபாடின்றி மேற்கொள்ளும் ஒரு விடயமாக இந்த சமூக ஊடகம் உள்ளது எனலாம்.

பொதுவாக சமூக ஊடகத்தில் கூறப்படும் அனைத்தும் உண்மை எனவும் பொய் எனவும் கூறிவிடமுடியாது. அதற்கு காரணம் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் செய்தி மூலங்கள், உண்மைதன்மை போன்ற செய்தி விழுமியங்களை சரிவர கொண்டிராததன்மையும் உண்டு.

சமூக ஊடகங்களில் ஆண் பெண் என்ற இருபாலரும் அங்கம் வகிக்கின்ற அதேசமயத்தில் தற்காலத்தில் பெண்களை துர்பாக்கியநிலைக்கு கொண்டு செல்வது சமூக ஊடகமாகவே காணப்படுகின்றது. அதாவது பெண்களை பல இன்னல்களுக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் கொண்டுபோவது சமூகஊடகம் என்றே கூற வேண்டும்.

சமூக ஊடகம் என்று கூறும்போது அனைவருக்கும் நினைவுக்குவரும் ஒரு விடயம் முகநூல் ஆகும். 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட முகநூல் இணையதளம் இன்று சுமார் பல பில்லியன் பாவனையாளர்களை கொண்டதாகவிளங்குகிறது. சிறுவர் முதல் வயோதிபர்கள் வரை முகநூல் என்ற ஒன்றினை பயன்படுத்தாதவர்கள் குறைவாகவே உள்ளனர் என்றே கூற வேண்டும்.
பொதுவாக முகநூலினை எடுத்துநோக்குவோமாயின் முகநூல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றி ஏதேனும் அவதூறான விடயத்தினை பரிமாறி கொண்டுள்ளது எனலாம். முகநூலில் வரும் விடயம் சரியானதா பிழையானதா என்று யாருக்கும் தெரியாத நிலையிலும் கூட அதனை பகிர்ந்து செல்லும் மனப்போக்கு இன்று அனைவரிடமும் காணப்பட்டுவருகிறது. அதேசமயம் அதுதொடர்பான விமர்சனங்களை எழுப்பும் போக்கும் அனைவரிடமும் காணப்படுகிறது.

ஒரு ஆண் பெண்ணின் பெயரில் போலியான கணக்குகளை ஆரம்பித்து, பெண்களிடமும் சக ஆண்களிடமும் தகாதவார்த்தைகளால் பேசுதல், பாலியல் தொந்தரவு செய்தல், பாலியல் ரீதியான அச்சுறுத்தல் செய்தல், தகாத புகைப்படங்களையும் அந்தரங்கமான காணொளிகளையும் அனுப்பிவிடல் போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முகநூலில் தினம் தினம் நடந்த வண்ணமாகவேக் காணப்படுகிறது. பெண்கள் தனது முகநூல் கணக்குகளில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்களை களவாடி போலியான முகநூல் கணக்குகளில் தவறாக பெண்களின் புகைப்படத்தை பிரயோகிக்கும் நிலையில் இன்று வெகுவாகவே காணப்படுகிறது.

அத்தோடு ஏதேனும் சமூகவிடயங்கள் தொடர்பில் பெண்கள் தங்களின் கருத்துக்களை பதிவேற்றம் செய்தால் அதனை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவர் அவர்களது உரிமையாகும். ஆனால் சிலர் அதாவது சில ஆண்கள், கருத்தினை கூறிய பெண்ணின் அந்தரங்க விடயங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தல், அப்பெண்ணை அவமானப்படுத்தல், அப்பெண் தொடர்பான பொய்யான புரளியை எழுப்பிவிடல் போன்ற பல்வேறுவகையான வன்முறைகள் முகநூலில் இடம்பெற்றுவருகின்றது. அத்தோடு அப்பெண் தொடர்பில் memes create செய்தல், அதனை தமது சகநண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்தல் போன்றனவும் இடம்பெறுகின்றது.

TikTok எனப்படும் சமூக ஊடகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பலவிடயங்கள் அதாவது பலவன்முறைகள் நிகழ்ந்துள்ளது. அதாவது பெண்கள் தமது விருப்பத்திற்கு ஏற்றாற் போன்று உடையணிந்து, பாவனைசெய்து, ஒப்பனைசெய்து tikTok செய்கின்றனர். அதனையும் கூட இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் விபச்சாரம் என்ற சொல்லின் ஊடாக பார்க்கின்றனர். தமக்குப் பிடித்த உடை அணிவதும் பாவனை செய்வதும் பெண்களது உரிமை. அதனையும் குறையாக பார்ப்பது அதற்கு பதில் பதிவேற்றம் செய்வது போன்ற ஏற்றுகொள்ள முடியாத விடயங்களை ஆண்கள் செய்வதும் சமூக ஊடகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளில் ஒன்றாகவே கருதமுடிகிறது.

ஒரு ஆணிடம் உனக்கு எப்படிபெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசை? என்று தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளர் கேட்கும் போது அதற்கு அந்த ஆணின் பதில் எனக்கு tikTok செய்யும் பெண்களைத் தவிர வேறுயாரை திருமணம் செய்து கொள்ள சொன்னாலும் செய்வேன் என்று கூறுகிறார். இதிலிருந்து டிக்டாக் செய்யும் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் ,அவர்கள் நல்லொழுக்கம் இல்லாதவர்கள் என்ற மனநிலைக்கு ஆண்கள் அனைவரும் தள்ளப்பட்டுவிட்டனர் என்று கூறலாம்.

அத்தோடு ஆண்களின் டிக்டாக் வெகுவாகவே பெண்களை கேலி செய்யும் முகமாகவும் பெண்களை வன்முறைக்கு உள்ளாகும் விதமாகவுமே காணப்படுகிறது. Double meaning இல் பெண்களை கிண்டல் செய்தல், பெண்களுக்கு எதிரான அவதூறான விடயங்களை செய்தல் ,பெண்கள் போன்று உடையணிந்து பாவனை செய்தல் போன்ற பலவிடயங்களையும் பல வன்முறைகளையும் நிகழ்த்துகின்றனர்.
Comment செய்யும் போது பெண்களை மிகவும் இழிவாகவும் கெட்ட வார்த்தைகளினாலும் பேசுகின்றனர். அதேசமயம் தேவையற்ற புகைப்படத்தையும் பதிவிடுகின்றனர்.

அடுத்ததாக WhatsApp என்னும் சமூகஊடகத்தினை எடுத்துநோக்குவோமாயின் இதிலும் பெண்களுக்கு எதிரான பலபாலியல் வன்முறைகள் இடம்பெற்றவண்ணமே காணப்படுகிறது. அதாவது பெண்கள் தனது கணக்கில் பதிவிடும் தமது புகைப்படத்தை எடுத்து ஆண்கள் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். அத்தோடு பெண்களின் தொலைபேசியை hacking செய்து அவர்களின் தொலைபேசிகளில் உள்ள அந்தரங்கமான விடயங்களையும் முக்கியமான சில ஆவணங்களையும் களவாடிகொள்கின்றனர். இந்த செயற்பாடு பெரும்பாலும் இன்று சாதாரண விடயமாகபோய்விட்டது.

இவ்வாறு hacking செய்து பெண்களை இக்கட்டான நிலைக்கும் அவமானப்படுத்தும் நோக்குடன் வன்முறைகள் நடக்கின்றன. பெண்கள் தனது கணவருடனோ அல்லது தனது காதலனுடனோ எடுக்கப்பட்ட அந்தரங்கமான புகைப்படங்களை களவாடி அதனை இணையதளத்தில் பதிவிடுகின்றனர். அல்லது புகைப்படத்தை பதிவிடப்போகிறேன் என பெண்களை அச்சுறுத்தும் நிலையும் காணப்படுகின்றது.
YouTube சமூகவலைதளத்தின் எடுத்துக் கொள்வோமாயின் அதிலும் பெண்களுக்கு எதிரான பலவன்முறைகள் இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றது அதாவது ஏதேனும் விடயம் தொடர்பில் பெண்கள் பேசினாலும் அதுதொடர்பான காணொளிகளை பதிவிட்டால் அதுதொடர்பான புரிந்துணர்வு இன்றி அதற்கு பலவிமர்சனங்களும் தேவைக்கு மீறிய பதில் பதிவுசெய்கின்றனர்.

பெண்களுக்கு நான்கு சுவர்களுக்குள் நடந்தபாலியல் வன்முறையும், பெண் அடிமைத்தனமும் இன்று வெளிஅரங்கத்திலும் நடப்பதற்கு சமூகஊடகங்களும் ஒரு காரணமாக அமைகின்றது. அதாவது பெண்கள் வீட்டினுள் இருந்தாலும் வன்முறைகள் இடம்பெறும் அதேசமயத்தில் சமூகத்திற்கு வெளியே வந்து தனது கருத்தினை தனது விமர்சனத்தையோ பதிவிட்டாலோ அதற்கும் வன்முறைகள் இடம்பெறும் என்பதை இந்த சமூகஊடகங்கள் நிரூபித்துகாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி சமூக ஊடகங்களினால் பாதிப்படையும் எண்ணிக்கையில், சமூகஊடகத்தின் வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்களில் 95 வீதமானோர் பெண்கள் என்றே கூறுகிறது.

இணையமானது சுதந்திரத்தையும் திறன்களை வளர்த்துக் கொள்ளும் மேடையாகவும் இருக்கும் என்ற நிலைமாறி இன்று சமூகஊடகங்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறையானது இன்று அனைத்தையும் குலைத்துவிட்டது என்றே கூறவேண்டும். சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகம் என்பது பெண்களை அசமந்தநிலைக்கு உள்ளாக்கும் ஒரு ஊடகமாகவே எண்ணப்பட்டுவருகிறது

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள்.

சமூக ஊடகம் எனப்படுவது நமது கருத்துக்களை படிக்கவும் பகிரவும் இணையத்தின் மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம் அல்லது மேடை என்று கூட கூறலாம். சமூக ஊடகத்தில் பெரும்பாலான செய்தியை உருவாக்குவதும் பகிர்வதும் தனிமனிதரான நுகர்வோரே. அதனாலேயே இது பரவலாக எல்லோராலும் விரும்பப்படுகிற ஒரு ஊடகமாக தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. அத்தோடு சாதாரண மனிதனின் குரலை பொதுவெளியில் உரக்கச் சொல்கிற சாதனமாக இருப்பதால் ஒரு மனிதன் தன்னை சமூகத்தின் அங்கமாக உணருகிறான்.

சமூக ஊடகவியல் என்பது தற்காலத்தில் அனைவரும் இயங்குவதற்கு காரணமான ஒன்றாகமாறிவிட்டது. அதாவது உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் ,நமது வினாக்களுக்கு விடையளிக்கும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்களேயாகும். Facebook, Twitter, Instagram போன்ற முன்னோடி சமூக ஊடகதளங்களின் மூலமாக இளைஞர்களின் சிறப்பான பல ஆக்கங்களுக்கும் அங்கீகாரம் மிக எளிதாக கிடைக்கிறது. அதேபோன்று அனைவரும் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் சமூக ஊடகங்கள் உதவியாக காணப்படுகின்றது. அத்தோடு சமூக ஊடகங்கள் இல்லை என்றால் உலகமே நின்று போய்விடும் என்ற மனநிலை தற்காலத்தில் அனைவரது உள்ளத்திலும் தீயாக பரவிவிட்டது. எனவே கூறவேண்டும். ஆண்,பெண் என்ற பாலின வேறுபாடின்றி மேற்கொள்ளும் ஒரு விடயமாக இந்த சமூக ஊடகம் உள்ளது எனலாம்.

பொதுவாக சமூக ஊடகத்தில் கூறப்படும் அனைத்தும் உண்மை எனவும் பொய் எனவும் கூறிவிடமுடியாது. அதற்கு காரணம் சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் செய்தி மூலங்கள், உண்மைதன்மை போன்ற செய்தி விழுமியங்களை சரிவர கொண்டிராததன்மையும் உண்டு.

சமூக ஊடகங்களில் ஆண் பெண் என்ற இருபாலரும் அங்கம் வகிக்கின்ற அதேசமயத்தில் தற்காலத்தில் பெண்களை துர்பாக்கியநிலைக்கு கொண்டு செல்வது சமூக ஊடகமாகவே காணப்படுகின்றது. அதாவது பெண்களை பல இன்னல்களுக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் கொண்டுபோவது சமூகஊடகம் என்றே கூற வேண்டும்.

சமூக ஊடகம் என்று கூறும்போது அனைவருக்கும் நினைவுக்குவரும் ஒரு விடயம் முகநூல் ஆகும். 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட முகநூல் இணையதளம் இன்று சுமார் பல பில்லியன் பாவனையாளர்களை கொண்டதாகவிளங்குகிறது. சிறுவர் முதல் வயோதிபர்கள் வரை முகநூல் என்ற ஒன்றினை பயன்படுத்தாதவர்கள் குறைவாகவே உள்ளனர் என்றே கூற வேண்டும்.
பொதுவாக முகநூலினை எடுத்துநோக்குவோமாயின் முகநூல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றி ஏதேனும் அவதூறான விடயத்தினை பரிமாறி கொண்டுள்ளது எனலாம். முகநூலில் வரும் விடயம் சரியானதா பிழையானதா என்று யாருக்கும் தெரியாத நிலையிலும் கூட அதனை பகிர்ந்து செல்லும் மனப்போக்கு இன்று அனைவரிடமும் காணப்பட்டுவருகிறது. அதேசமயம் அதுதொடர்பான விமர்சனங்களை எழுப்பும் போக்கும் அனைவரிடமும் காணப்படுகிறது.

ஒரு ஆண் பெண்ணின் பெயரில் போலியான கணக்குகளை ஆரம்பித்து, பெண்களிடமும் சக ஆண்களிடமும் தகாதவார்த்தைகளால் பேசுதல், பாலியல் தொந்தரவு செய்தல், பாலியல் ரீதியான அச்சுறுத்தல் செய்தல், தகாத புகைப்படங்களையும் அந்தரங்கமான காணொளிகளையும் அனுப்பிவிடல் போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முகநூலில் தினம் தினம் நடந்த வண்ணமாகவேக் காணப்படுகிறது. பெண்கள் தனது முகநூல் கணக்குகளில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்களை களவாடி போலியான முகநூல் கணக்குகளில் தவறாக பெண்களின் புகைப்படத்தை பிரயோகிக்கும் நிலையில் இன்று வெகுவாகவே காணப்படுகிறது.

அத்தோடு ஏதேனும் சமூகவிடயங்கள் தொடர்பில் பெண்கள் தங்களின் கருத்துக்களை பதிவேற்றம் செய்தால் அதனை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவர் அவர்களது உரிமையாகும். ஆனால் சிலர் அதாவது சில ஆண்கள், கருத்தினை கூறிய பெண்ணின் அந்தரங்க விடயங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தல், அப்பெண்ணை அவமானப்படுத்தல், அப்பெண் தொடர்பான பொய்யான புரளியை எழுப்பிவிடல் போன்ற பல்வேறுவகையான வன்முறைகள் முகநூலில் இடம்பெற்றுவருகின்றது. அத்தோடு அப்பெண் தொடர்பில் அநஅநள உசநயவந செய்தல், அதனை தமது சகநண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்தல் போன்றனவும் இடம்பெறுகின்றது.

memes create எனப்படும் சமூக ஊடகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பலவிடயங்கள் அதாவது பலவன்முறைகள் நிகழ்ந்துள்ளது. அதாவது பெண்கள் தமது விருப்பத்திற்கு ஏற்றாற் போன்று உடையணிந்து, பாவனைசெய்து, ஒப்பனைசெய்து வமைவுழம செய்கின்றனர். அதனையும் கூட இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் விபச்சாரம் என்ற சொல்லின் ஊடாக பார்க்கின்றனர். தமக்குப் பிடித்த உடை அணிவதும் பாவனை செய்வதும் பெண்களது உரிமை. அதனையும் குறையாக பார்ப்பது அதற்கு பதில் பதிவேற்றம் செய்வது போன்ற ஏற்றுகொள்ள முடியாத விடயங்களை ஆண்கள் செய்வதும் சமூக ஊடகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளில் ஒன்றாகவே கருதமுடிகிறது.

ஒரு ஆணிடம் உனக்கு எப்படிபெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசை? என்று தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளர் கேட்கும் போது அதற்கு அந்த ஆணின் பதில் எனக்கு வமைவுழம செய்யும் பெண்களைத் தவிர வேறுயாரை திருமணம் செய்து கொள்ள சொன்னாலும் செய்வேன் என்று கூறுகிறார். இதிலிருந்து டிக்டாக் செய்யும் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் ,அவர்கள் நல்லொழுக்கம் இல்லாதவர்கள் என்ற மனநிலைக்கு ஆண்கள் அனைவரும் தள்ளப்பட்டுவிட்டனர் என்று கூறலாம்.

அத்தோடு ஆண்களின் டிக்டாக் வெகுவாகவே பெண்களை கேலி செய்யும் முகமாகவும் பெண்களை வன்முறைக்கு உள்ளாகும் விதமாகவுமே காணப்படுகிறது. Tikka இல் பெண்களை கிண்டல் செய்தல், பெண்களுக்கு எதிரான அவதூறான விடயங்களை செய்தல், பெண்கள் போன்று உடையணிந்து பாவனை செய்தல் போன்ற பலவிடயங்களையும் பல வன்முறைகளையும் நிகழ்த்துகின்றனர்.

Comment செய்யும் போது பெண்களை மிகவும் இழிவாகவும் கெட்ட வார்த்தைகளினாலும் பேசுகின்றனர். அதேசமயம் தேவையற்ற புகைப்படத்தையும் பதிவிடுகின்றனர்.

அடுத்ததாக hacking. என்னும் சமூகஊடகத்தினை எடுத்துநோக்குவோமாயின் இதிலும் பெண்களுக்கு எதிரான பலபாலியல் வன்முறைகள் இடம்பெற்றவண்ணமே காணப்படுகிறது. அதாவது பெண்கள் தனது கணக்கில் பதிவிடும் தமது புகைப்படத்தை எடுத்து ஆண்கள் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். அத்தோடு பெண்களின் தொலைபேசியை hacking செய்து அவர்களின் தொலைபேசிகளில் உள்ள அந்தரங்கமான விடயங்களையும் முக்கியமான சில ஆவணங்களையும் களவாடிகொள்கின்றனர். இந்த செயற்பாடு பெரும்பாலும் இன்று சாதாரண விடயமாகபோய்விட்டது.

இவ்வாறு hacking செய்து பெண்களை இக்கட்டான நிலைக்கும் அவமானப்படுத்தும் நோக்குடன் வன்முறைகள் நடக்கின்றன. பெண்கள் தனது கணவருடனோ அல்லது தனது காதலனுடனோ எடுக்கப்பட்ட அந்தரங்கமான புகைப்படங்களை களவாடி அதனை இணையதளத்தில் பதிவிடுகின்றனர். அல்லது புகைப்படத்தை பதிவிடப்போகிறேன் என பெண்களை அச்சுறுத்தும் நிலையும் காணப்படுகின்றது.
YouTube சமூகவலைதளத்தின் எடுத்துக் கொள்வோமாயின் அதிலும் பெண்களுக்கு எதிரான பலவன்முறைகள் இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றது அதாவது ஏதேனும் விடயம் தொடர்பில் பெண்கள் பேசினாலும் அதுதொடர்பான காணொளிகளை பதிவிட்டால் அதுதொடர்பான புரிந்துணர்வு இன்றி அதற்கு பலவிமர்சனங்களும் தேவைக்கு மீறிய பதில் பதிவுசெய்கின்றனர்.

பெண்களுக்கு நான்கு சுவர்களுக்குள் நடந்தபாலியல் வன்முறையும், பெண் அடிமைத்தனமும் இன்று வெளிஅரங்கத்திலும் நடப்பதற்கு சமூகஊடகங்களும் ஒரு காரணமாக அமைகின்றது. அதாவது பெண்கள் வீட்டினுள் இருந்தாலும் வன்முறைகள் இடம்பெறும் அதேசமயத்தில் சமூகத்திற்கு வெளியே வந்து தனது கருத்தினை தனது விமர்சனத்தையோ பதிவிட்டாலோ அதற்கும் வன்முறைகள் இடம்பெறும் என்பதை இந்த சமூகஊடகங்கள் நிரூபித்துகாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி சமூக ஊடகங்களினால் பாதிப்படையும் எண்ணிக்கையில், சமூகஊடகத்தின் வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்களில் 95 வீதமானோர் பெண்கள் என்றே கூறுகிறது.

இணையமானது சுதந்திரத்தையும் திறன்களை வளர்த்துக் கொள்ளும் மேடையாகவும் இருக்கும் என்ற நிலைமாறி இன்று சமூகஊடகங்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறையானது இன்று அனைத்தையும் குலைத்துவிட்டதுஎன்றே கூறவேண்டும். சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகம் என்பது பெண்களை அசமந்தநிலைக்கு உள்ளாக்கும் ஒரு ஊடகமாகவே எண்ணப்பட்டுவருகிறது

Ramesh Rejeena
University of jaffna
Media Studies
Final Year

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :