அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
அந்தவகையில், கடந்த வியாழக்கிழமை, கண்டி (18) மாவட்டத்துக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கண்டி, அக்குரனை, தெழும்புகஹவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் கண்டி, நீரல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் உடுநுவர, ஹந்தெஸ்ஸ கிராமத்தில் நிர்மாணிக்கபட்ட சிகிச்சை நிலையக் கட்டிடம் ஆகியவற்றை மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
அத்துடன், கண்டி, உடுநுவர, அல்/மனார் தேசிய பாடசாலையில் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2019-2020 ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்விழும் அதிதியாக ரிஷாட் எம்.பி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுகளில், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment