தமிழையும் வரலாற்றையும் ஏந்தி அரசியலில் வெற்றி பெற்றவர் மூதூர் மஜீது_எழுத்தாளர் கனகசபை தேவகாட்சம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
றைந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் மூதூரில் உள்ள அத்பால் சிறுவர் இல்லத்தில் நேற்று (13)இடம் பெற்றது.

இதன் போது சிறுவர்களுக்கான மதிய போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போதுக்ஷஉரையாற்றிய எழுத்தாளர் கனகசபை தேவகாட்சம்
அழகு தமிழை அடுக்கு மொழியிலும் கம்பீரமான உச்சரிப்பையும் ஒவ்வொரு அரசியல் மேடையிலும் பேசுவதோடு தமிழ் மக்களின் புரான வரலாற்றை திருகோணமலை வாழ் மக்கள் மத்தியிலும் தெளிவாக உரையாற்றி அரசியலில் இன்று வரை நினைக்கப்படும் அளவிற்கு வரலாறு படைத்த ஆசான் அப்துல் மஜீது என்று கூறுவது வெறும் புகழ்ச்சி வார்த்தைகளல்ல . 1970 களில் இருந்த அரசில் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பேரினவாத அரசியலுக்கு அடிபணியாது தமிழையும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் துணிவோடு செயற்படுத்தியவர் அவரின் வெற்றிடம் இந்த மண்ணில் இன்னும் நிரப்பபப்படவில்லை என்பது நிதர்சனம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :