கிண்ணியாவில் உள்ள குறுஞ்சாக்கேணி பாலம் அமைப்பதற்காக பழைய பாலம் உடைக்கப்பட்டு ஒப்பந்தக் காலத்தினை தாண்டியும் இன்னும் நிருமானப்பணிகள் பூர்த்தியடையவில்லை.
புதிய பாலம் அமைப்பதற்காக பழைய பாலத்தை உடைத்தவர்கள் அதற்கான பாதுகாப்பான மாற்று பயண ஏற்பாடுகளை அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் அபிவிருத்தி திட்டம் என்று விளம்பரம் செய்துகொண்டு அதில் கிடைக்கின்ற தரகு பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்கின்ற அரசியல்வாதிகள் மாற்று பாதைக்கான ஏற்பாடுகளை செய்யாததன் விளைவாகவே இன்றைய அனர்த்தம் ஏற்பட்டு அப்பாவிக் குழந்தைகள் பலியாக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுப்பாதைக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இந்த பாலத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட தரகுப்பணத்தில் சிறிய தொகையினைக்கொண்டு பாதுகாப்பான மாற்றுப்பாதையினை உருவாக்கியிருக்கலாம்.
தங்களது சுயநல அரசியலுக்காக அபிவிருத்தி செய்கிறோம் என்று ஊடகங்களில் விளம்பரம் செய்கின்ற இவ்வாறன அரசியல்வாதிகளின் சுயனலத்த்திற்கான பொறியினுள் மாட்டிக்கொண்டு மரணித்த எதுவும் அரியாத அப்பாவி குழந்தைகளுக்காக எங்களது கவலையை வெளிப்படுத்துவதுடன், இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
0 comments :
Post a Comment