அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அட்டன் புருட்ஹில் பகுதியில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (29.11.2021) சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து ஒரு மணத்தியாலத்தின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் வெடித்து சிதறியதாக தெரிவித்தனர்.
எனினும் இதன் போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்த அட்டன் பொலிஸார் சமையல் அறையில் இருந்த சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment