திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு (5) மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களை இணங்க அப்பிரதேசங்களில் போக பயிர்செய்கை செய்வதற்குரிய ஏற்பாட்டின் கீழ் காணி விடுவிப்பு நடைபெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இதன் மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தியை அதிகரித்து நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தக் கூடியதாக அமையும்.பயிர் செய்ய முடியுமான ஒவ்வொரு பிரதேசத்திலும் உற்பத்தியை மேற்கொண்டு நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தினுடைய மூல நோக்கங்களில் ஒன்றாக காணப்படுவதா இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
சுற்றாடலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் சுற்றாடலை பாதுகாத்து பிரதேசத்தில் இருக்கக்கூடிய பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தை, வருமானத்தை அதிகரிக்க கூடியதாக அமையும் என்று இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்தார்.
யுத்தத்திற்கு முன்னர் தாம் இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கெயை மேற்கொண்டு வந்ததாகவும் நடைபெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசங்களில் பயிர் செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பிரதேசம் கைவிடப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது. கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் பயிர் செய்வதற்கான அனுமதியை உரிய அதிகாரிகளிடம் கோரிய போதும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெறவில்லை.

இது தொடர்பில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வந்ததாகவும் மிக குறுகிய காலத்தில் பயிர் செய்வதற்காக விடுவித்து பயிர் செய்வதற்கான அனுமதியை வழங்கியமை குறித்து பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.முஹமட் கனி , பிரதேச அரசியல் தலைமைகள் உரிய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :