அண்மையில் காலம் சென்ற முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் சமூக அரசியல் நிபுணத்துவ ஆய்வாளருமான மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீனுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 44ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (29) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மாநகர உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அவர்களினால் கொண்டு வரப்பட்ட இந்த அனுதாபப் பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ.சத்தார் வழிமொழிந்து உரையாற்றினார்.
இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்காக மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீன் அவர்கள் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 03 தசாப்த காலமாக மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகள் குறித்து இரு உறுப்பினர்களும் இதன்போது சுட்டிக்காட்டி, புகழாரம் சூட்டினார்.
இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்த மாநகர முதலவர் ஏ.எம்.றகீப் அவர்கள், இந்த அனுதாபத் தீர்மானத்தை மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீன் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.
0 comments :
Post a Comment