கல்முனைக் கோட்டக் கல்வி அலுவலகத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரி பீ.எம். ஸம் ஸம் அவர்களை வரவேற்று,பாராட்டும் நிகழ்வு இன்று (25) கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யா தலைமையில் இடம் பெற்றது.
புதிதாக பதவியேற்ற கோட்டக் கல்வி பணிப்பாளருக்கு பாடசாலை அபிவிருத்திக் குழுவினரால் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக ஆசிரிய ஆலோசகர் ஏ.கே.வை.தாஸிம் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எஸ்.எல் அமீர் ஏ பாறுக் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment