கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி நான்கு உண்டியல்கள் திருட்டு!காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம்.சிசிவிரி கமராவிலும் பதிவு.



வி.ரி.சகாதேவராஜா-
கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி மாஸ்க் அணிந்துவந்த நபரால் நான்கு உண்டியல்கள் தகர்க்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(09)செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஆலயத்திலுள்ள சிசிவிரி கமராவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 -1.30மணிவரையான காலப்பகுதியில் திருடனொருவன் தலைக்கவசத்துடன் சுகாதாரமுறைப்படி மாஸ்க் அணிந்து ஜாக்கட் அணிந்து மதில்மேலால் ஏறி ஆலயத்துள் குதித்து ஆறுதலாக ஒருமணிநேரம் இந்த திருட்டுச்சம்பவத்தை நடாத்தியுள்ளான்.
மழைபொழிந்துகொண்டிருப்பதும் திருடனைக்கண்டதும் நாய் குரைப்பதும் கமராவில் பதிவாகியுள்ளது.
காலையில் உண்டியல்கள் தகர்க்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டமை ஆலய நிருவாகத்திற்கு தெரியவந்தது. அவர்கள் காரைதீவு மற்றும் சம்மாந்துறைப் பொலிசில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
பொலிசார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை காரைதீவு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள ஆலயத்திலும் உண்டியல் உடைக்கப்பட்ட பணம் திருட்டுப்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :