ஆனைக்குழு முன் முன்னாள் போராளிகள் சாட்சியம்



அஷ்ரப் ஏ சமத்-
டக்கில் வாழும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 7 பேர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு முன் ஆஜராகி தாம் எதிா்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள் இவ் அமா்வு நேற்று முன்தினம் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ஜ. எம். சி.எச் ல் வைத்து நடைபெற்றது.

இவ் ஆணைக்குழுவின் தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபா் சந்திரா பெர்ணான்டோ, சட்டத்திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இவ் அமா்வில் சமூகமளித்திருந்தனா்
முன்னாள் போராளிகளை ஆணைக்குழு முன் கருத்து தெரிவிக்க மலைய மக்கள் முன்னணி தலைவா் பாராளுமன்ற இராதக் கிருஸ்னன், அக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவா் சதிஸ்குமாரும் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவா் அங்கு கருத்து தெரிவிக்கையில்
நான் வவுனியாவில் வாழ்கின்றேன். யுத்த காலத்தில் நான் செல் அடிபட்டு கால்களை இழந்துள்ளேன். எனது மனைவி இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வேறு ஒருவரை திருமணம்முடித்து அவள் வெளிநாடு சென்றுவிட்டாள். நான் வவுனியாவில் சில்லரைக்கடை ஒன்றை வைத்து எனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகின்றேன். நான் கொழும்பில் பிறந்து வாழ்ந்தவர் எனது கல்வியை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாாியில் கற்றவன். எனது அடையாள அட்டையும் இன்றும் கொழும்பு முகவரியிலேயே தான் இருக்கின்றது. நான் 20 வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தேன். அதன் பின்னா் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னா் காயங்களுடன் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்கால் ஊடாக வவுனியாவில் அகதி முகாமில் இருந்தேன் . அதன் பின்னா் என்னை இரானுவம் கைது செய்து பல சிறைச்சாலைகளில வைத்தனா் . என்மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கொன்றினை வவுனியா உயா் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னா் விடுதலையானேன். நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அரச கடன் 2 இலட்சம் தரப்பட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பித்தேன்.
எங்களது முக்கிய கோரிக்கை இந்த அரசாங்கத்திடமும் இந்த ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொள்வது - ஒவ்வொறு வருடத்தின் நவம்பா் மாதம் 27ஆம்திகதிய விடுதலைப்புலிகளின் உறவினா்கள், உறுப்பினர் முதலாவது உறுப்பினர் மறைந்த தினத்தினையை நாங்கள் ஞாபகப்படுத்த கேட்கின்றோம். எங்களது உறவினகள் சக நண்பா்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி அதில் விழுந்து அழுது எங்களது உறவின் கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தினை தருமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

இரானுவம் வெற்றி தினத்தினை நினைவு கூருகின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்தவா்களுக்குக் கூட கோப்பாயில் ஒரு துாபி ஒன்றும் அமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. . அத்துடன் ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவா்களுக்கு 2 தினங்களை அரசாங்கம் நினைவு கூற அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எங்களது உறவுகளை நினைத்து மெழுகுதிரி ஏற்றுவதற்கு மறுக்கின்றனா். எங்களது இறந்த உறவினகள், நண்பா்கள் சகோதர சகோதரிகளுக்கு நினைவு கூற அனுமதி தர மறுக்கின்றாா்கள். இது சாதாரண எங்களது உரிமையாகும்.
நாங்கள் நினைவு கூற ஆரம்பித்தால் எங்கள் வீடுகளின் இரானுத்தினரும், சி.ஜ.டி யினர் எங்களை சுற்றி வலைக்கின்றாா்கள். கைது செய்கின்றாா்கள். கொண்டு போய் அடைக்கின்றாா்கள். இதனால் நாங்கள் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி.ஜ.டி யினா் வருகை தருகின்றனா். இதனால் அயலவா்கள் எங்களது குழந்தைகள் அச்சமடைகின்றனா்.

நாங்கள் தற்பொழுது இங்கு கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்ததைக் கூட எங்கள் வீடுகளில் சி.ஜ.டி யினா் அங்கு போய் எனது பிள்ளைகளிடம் விசாரனை செய்கின்றனா். எங்கள் வாழ் நாளிள் இதுவே முதல் தடவை ஒரு ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் சா்ந்தாப்பமாகும்.

நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோறும் போன்று சமமாகவும் சமாதானமாகவும் நற் பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் . நாங்கள் எங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்த முடியாமல் உள்ளது. எங்களை முன்னாள் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினரும் அரச அதிகாரிகளும் எங்களை சமூகத்திலிருந்து விலக்கி வைத்துப் பாா்க்கின்றனா். அதுமட்டுமல்ல எங்களை சந்தேகக் கண்கள் கொண்டே பாா்க்கின்றனா். கணவன் மனைவியை இழந்த போராளிகளுக்கு இரண்டாம் திருமண முடிப்பதற்குக் கூட முடியாமல் உள்ளது. பாதுகாப்புப் படையினரும் சி.ஜ.டி அடிகளும் வீடு வருவதால் எவரும் எங்களை திருமண முடிப்பதற்கு முன்வருவதில்லை.
எங்களது வடக்கில் உள்ள காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், காணாமல் போன எங்களது உறவுகளுக்கு அவா்கள் பற்றிய உண்மையான நிலையை தெளிவுபடுத்தப்படல் வேண்டும். ஹிந்து மதத்துற்கும் பௌத்த மதத்திற்கு பாரிய சம்பந்தம் உ்ள்ளது. பௌத்த மதம் சின்னங்கள் எனச் சொல்லி வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனா். இவை நிறுத்தப்படல் வேண்டும். எங்களது காணி நிலங்களை மகாவலி , சொ்ணபூமி, வீடமைப்பு, வனவளம், சுற்றாடல் சூழலியல் என திடடமிட்டு ஆக்கிரமிக்கின்றனா். சகல சமுகங்களும் சமதானமாக சமமாக வாழ வழிவகிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வதாரம், வீடு, புனா்த்தாபணம் புனா்வாழ்வுத் திட்டங்களை உரிய முறைப்படி அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.
விடுதலைப்புலிகள் ஆசியாவிலேயே கடல் நீர்மூழ்கிக் கப்பல் , ஹெலிக்கெப்படா் உற்பத்தி செய்த ஒரு அமைப்பு எங்களுக்கு எவ்வாறு உதவி வழங்கப்படல் வேண்டும். என எங்களுக்குத் தெரியும் இன்றும் எங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து தான் வருகின்றோம். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :