ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தலைமையிலான உயர்மட்ட குழு அம்பாறைக்கு விஜயம் !



நூருல் ஹுதா உமர்-
க்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஞாயிற்று கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தலைமையில் முன்னாள் பெற்றோலிய வளத்துறை பிரதி அமைச்சர் அனோமா கமகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சன்பித் சமரசிங்க, ரத்னபிரிய, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் யூ. எல்.ஆதம் லெப்பை அடங்கலான குழுவினர் இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இது தொடர்பாக கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் பிரதேச காரியாலயத்தில் பிரதேச அமைப்பாளர் எம் எம் எம் ரிபா தலைமையில் இடம்பெற்றது. மட்டுமின்றி அம்பாறை மாவட்ட பல பிரதேசங்களுக்கும் இந்த குழுவினர் விஜயம் மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :