மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு கொங்கிறீட்வீதி



வி.ரி.சகாதேவராஜா-
னாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ், வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி கொங்கிறீட் வீதியாக புனர்நிருமாணம் செய்யப்படவிருக்கின்றது.

நீண்டகாலமாக இவ்வீதி புனரமைக்கப்படாமல் தூர்ந்துபோய் போக்குவரத்திற்கு பொருத்தமில்லாததாக இருந்தது. அவ்வீதியை, ஜனாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் புனரமைக்க ஏற்பாடாகியுள்ளது.

அதற்கான அளவை மதிப்பீட்டுவேலைகள் நேற்று அங்கு ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற்றது. வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனைப்பிராந்திய சிரேஸ்ட தொழினுட்பஉத்தியோகத்தர் எ.எம்.ஜௌபர் மதிப்பீட்டுவேலைகளை மேற்கொண்டார்.
நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் ரி.யோகநாயகன், திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.அரியநாயகம் ஆகியோர் மேற்கொண்ட திவீரமுயற்சியின் காரணமாக சுமார் ஒன்றரை கிலோமீற்றர் வீதி ஆலயத்திற்காக கொங்கிறீட் வீதியாக போடப்படவிருக்கின்றது.

ஆலய பரிபாலனசபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, உபதலைவர் எஸ்.கமலேஸ்வரன், நிருவாகசபை உறுப்பினர்களான இ.அரியநாயகம்,எஸ்.சசிகரன் உள்ளிட்டோரும் சமுகமளித்திருந்தனர்.

இவ்வீதி புனரமைக்கப்பட்டதும் சகலவாகனங்களும் பயணிக்கமுடியுமென்றும் பக்தர்கள் பயமின்றி சுதந்திரமாக ஆலயத்தை தரிசிக்கமுடியுமெனவும் ஆலய செயலாளர் த.சண்முகநாதன் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :