நாங்கள் அனுப்பிவைத்த பாராளமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கே வில்லர்களாக உருப்பெற்றுள்ளனர்.-அமீர் அலி



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாங்கள் பாராளமன்றத்துக்கு அனுப்பிவைத்த பாராளமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கே வில்லர்களாக உருப்பெற்றுள்ளனர். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்து காப்பாற்ற முடியாத அரசியல் இந்த சமூகத்திற்கு தேவையா? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேள்வியெழுப்பினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன் ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது மேற்சொன்னவாறும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றான், சண்டை பிடிக்கின்றான் என்பதற்காக, குரலை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொண்ட முனைப்பே றிஷாத் பதுர்தீன் கைதும், அவருடை மனைவி, மாமனார், மைத்துனர், நல்லகாலம் அவருடை பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் இல்லாவிடின் அவர்களையும் அழைத்து சென்றிருப்பார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வந்து பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தோம். தற்போது அவர்களே தலைமைக்கும், கட்சிக்கும் வில்லாக செயற்படுகின்ற ஒரு காலகட்டத்தினை நாங்கள் கண்டோம். இவர்கள் அருவருப்பாக நடந்து கொண்டார்கள்.

எங்களிடத்தில் ஒரு கதை, அரசியல் தலைவர்களிடத்தில் ஒரு காட்டிக் கொடுப்பு செய்தார்கள். நாங்களும் நீங்கள் மேற்கொண்ட பிரார்த்தனை மூலமே றிஷாத் பதுர்தீனை உயிரோடு பார்க்க கிடைத்தது. சஹ்ரானின் குண்டு வெடிப்பில் 250 மேல் உயிர்களை காவு கொண்டு இந்த அரசாங்கத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக 350 மேற்பட்ட ஜனாசாக்களை எரித்து அழகு பார்த்து எமது ஒட்டு மொத்த சமூகத்தையும் சீர்குலைத்து சின்னா பின்னமாக்க வேண்டும் என்கின்ற நிலவரத்தில் இருந்த பொழுதும் கூட எங்களுடைய உறுப்பினர்கள் அவர்களுக்கு கூஜா தூக்கிய நிகழ்வை முஸ்லிம் சமூகம் இலகுவில் மறந்துவிடக் கூடாது.

தேசியத்திலே முஸ்லிம் அரசியல் நாறிப்போய்க் கிடக்கின்றது. இந்த நாறிப்போய்க் கிடக்கின்ற அரசியல் சரிவந்து விடும் என்று நினைத்து விடாதீர்கள். இவ்வாறு காவு கொடுப்பவர்கள், தனிப்பட்ட முறையில் எதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்து காப்பாற்ற முடியாத அரசியல் இந்த சமூகத்திற்கு தேவையா என்று நான் கேட்கின்றேன் என்றார்.

குறித்த மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன், முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர்களான ஐ.ரி.அஸ்மி, கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் எம்.அமீர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை நகரசபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.றிபாஸ், வவுனியா மௌலவி முனாஜித், அக்கறைப்பற்று ஹனிபா மதனி, கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேச ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :