சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாடு மற்றும் உத்தரவாத விலையை நிர்ணம் செய்தல் தொடர்பாக சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது சீமெந்து பக்கடில் பொறிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வது தொடர்பாகவும், சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணத்தையும் சீமெந்து வியாபாரிகளிடம் கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் இவ்பிரச்சினையினை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
சீமெந்து வியாபாரத்தில் பதுக்கல் மேற்கொள்ளாமல் பொதுமக்களுக்கும் பாதிப்பு அல்லாத வகையில் சீமெந்து வியாபாரிகள் மனசாட்சியுடன் சீமெந்து வியாபாரத்தை மேற்கொள்ளுமாறு தவிசாளர் சீமெந்து வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், வருமானப் பரிசோதகர் ஏ.எம்.அமீன், பட்டதாரி பயிலுனர் எம்.ரீ.எம்.நப்ரீஸ், சீமெந்து வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment