நுவரெலியாவில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்..



க.கிஷாந்தன்-
சிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கோரி நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (03) பேரணியூடான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலைகளின் பெற்றோர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் நடைபெற்றது.

நுவரெலியாவில் உள்ள நல்லாயன் மகளிர் கல்லுரி, மற்றும் புனித சவரியார் பாடசாலை ஆகியவற்றின் பெற்றோர்களே இவ்வாறு பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தை நடத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :