வாழைச்சேனையில் வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை - சிவப்பு எச்சரிக்கை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் தற்போது மழை காலம் ஏற்பட்டுள்ள நிலையிலும், டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னிட்டும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரமோகன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் கலந்து கொண்டனர்.

இதன்போது வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது வீட்டுச் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்காத நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், டெங்கு குடம்பிகள் காணப்படும் வீட்டு நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டதுடன், உடனடியாக வீட்டு சுற்றுச் சூழலை சுத்தம் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

நாட்டில் தற்போது மழை காலம் ஏற்பட்டுள்ள நிலையில் டெங்கு தாக்கம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரிக்காத வகையில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :