கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்



எம். என். எம் . அப்ராஸ் , ஏ. எல்.எம்.ஷினாஸ்-
தேசிய டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் உள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் நாளை ( 11/11/2021) வியாழக்கிழமை முதல்முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மிதெரிவித்தார்.

இது தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி மேலும் தெரிவிக்கையில் தேசிய டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்உள்ள பிரதேசங்களில் நாளை (11) முதல் மூன்று நாட்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்குக்கட்டுப்பாட்டு பிரிவினர் ,பொலிசார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைத்து வீட்டுக்கு வீடு சென்றுடெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

தற்போது எமது பிரதேசங்களில் பருவ மழை பெய் து வரும் நிலையில் இதனால்
டெங்கு பரவும் சாத்தியமுள்ளதுடன் பொது மக்கள் தமது சுற்று சூழலை
டெங்கு நுளம்பு பரவக்கூடிய நிலையில் வைத்திருக்காமல் தமது சுற்றுச் சூழலை சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும், எமது டெங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பு பரவும் ஏதுவான இடங்களைவைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென கல்முனை தெற்கு சுகாதாரவைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் . அஸ்மி மேலும் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :