சம்மாந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.



எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் 45ஆவது அமர்வு தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று(16) இடம்பெற்றது.

இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 20 உறுப்பினர்களை கொண்ட சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வரவு செலவுத் திட்டமானது சம்மாந்துறை பிரதேச மக்களின் பங்களிப்புடன் தேவைகளையும், நலனையும் முன்னுரிமைப்படுத்தி, மக்களின் கருத்துக்களையும், துறைசார் நிபுணர்களின் ஆலோசனை அடங்கிய வரவு செலவுத்திட்டம் என்பதனால் பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :