பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கல்முனையில்.



நூருள் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ், ஏ.எல்.எம். சினாஸ், சர்ஜுன் லாபீர்-
ல்முனை, கல்முனை வடக்கு உப, சாய்ந்தமருது ஆகிய பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின் ஒழுங்கமைப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸனின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்றது. .


கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், பள்ளிவாசல்களின் தலைமை நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், படை அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்வில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கு முதல் அனர்த்த முன் ஆயத்த திட்டங்கள் தொடர்பாகவும், வெள்ள நீர் தேங்கும் இடங்களை அகற்றுவது, அனர்த்த தயார்படுத்தலை செய்வது, கிராம மட்டத்தில் அனர்த்த குழுக்களை வலுப்படுத்தல் , முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை விருத்தி செய்தல், வெள்ளம், சூறாவளி அனர்த்தங்கள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளல் தொடர்பாகவும் மற்றும் நலன்புரி இடங்களின் விஸ்தரிப்பு. அவசர உதவி பொருட்கள், மூன்று பிரதேசங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயற்பாடுகள், வெள்ள அனர்த்த திட்டங்கள், சேமிப்பு உபகரணங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :