கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை டேன்ஜர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளி கிரிக்கெட் தொடரை ஏறாவூர் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துள்ளது.
ஓட்டமாவடி ஏ.சி.எம். புரோடக்சன் ஏற்பாட்டில் டேன்ஜர் விளையாட்டுக் கழகம் நடாத்திய இத் தொடரில் 32 அணிகள் பங்குபற்றின.
அணிக்கு எட்டுப்பேர், நான்கு ஓவர்கள் கொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (19) காவத்தமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் ஏறாவூர் கோல்ட் ஸ்டார் மற்றும் செவனப்பிட்டிய வை.சி.சி. ஆகிய அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் கோல்ட் ஸ்டார் அணி 4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டன.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செவனப்பிட்டிய வை.சி.சி. அணி 4 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 30 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டன.
ஏறாவூர் கோல்ட் ஸ்டார் அணி ஐந்து ஓட்டங்களினால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டிக்கு அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், சிரேஸ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், ஏ.சி.எம்.புரோடக்சன் தலைவர் காதர் ஷரீப், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.கே.எம்.சர்ஜூன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment