கழிவுகளை அகற்ற கோரிக்கை



நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-
நீண்ட காலமாக கழிவுகள் அகற்றப்படாமையினால் சூழல் மாசடைவதுடன் தொற்று நோய் ஏற்படலாமென ஒஸ்போன் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட டங்கெல்ட் பொது சுகாதார பிரிவின் ஒஸ்போன் தோட்ட பகுதிகளிலே இவ்வாறு கழிவுகள் அகற்றப்படாமல் இருக்கின்றது.

பொகவந்ததாலாவை பெருந்தோட்ட கம்பனியின் ஒஸ்போன் தோட்ட நிர்வாகத்தினால் நோட்டன் அட்டன் பிரதான வீதியோரம் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கழிவு சேகரிப்பு தொட்டில்களில் கொட்டப்படும் கழிவுகள் நிர்வாகத்தினால் நீண்ட காலமாக அகற்றப்படவில்லை இதனால் கழிவுகளை நிறம்பி நாய்கள் இழுத்துச்சென்ற வீதிகளிலே போடுவதனால் பிரதான வீதியோராம் துர்நாற்றம் வீசுவதுடன் குறித்தப்பகுதியில் குடியிருப்புகளும் உள்ளமையினால் தொற்று நோய்கள் ஏற்படும் என குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஒஸ்போன் பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :